பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Sunday, May 20, 2007

ஜேசுதாஸ் பாடல்கள்

1978ல் வயசுப் பொண்ணு படத்தில் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசையில் கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளில் வரும் இந்தப் பாடலும் சின்ன வயசில் நான் பலமுறை வானொலியில் கேட்டு ரசித்த K.J. ஜேசுதாஸ் பாடல். சின்னத்திரையில் இதுவரை பார்க்க வாய்க்கவில்லை. பாடற்காட்சி எப்படி இருக்கும் என்ற யூகமும் இல்லை; படம் பற்றிய தகவலும் இல்லை (பார்த்தவர்கள் கூறுங்களேன், படத்தையும், பாடலையும் பற்றி...).




இந்தப் பாடலை கேட்க சொடுக்கவும் இங்கே
***
பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் 'அடிக் கானக் கருங்குயிலே...' பாடலிலும் தளபதி படத்தில் 'காட்டுக் குயிலு மனசுக்குள்ள...' பாடலிலும் K.J.ஜேசுதாஸ் பாடியது அவரது மற்ற பாடல்களிலிருந்து வேறுபட்டு ஒருவித புது ரசனை அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. இதற்கு வெகுகாலம் முன்னரே, அதாவது 1980ல் இளமைக் கோலம் படத்தில் வரும் இசைஞானி இளையராஜாவின் இசையில் கங்கை அமரனின் வரிகளில் வந்த இந்தத் துள்ளல்வகைப் பாடல், ஜேசுதாஸ் பாடியதனாலேயே ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.


இந்தப் படத்தில் சிறந்த பாடல் எது என்றால் நிச்சயம் ஜேசுதாஸ் பாடிய மற்றொரு பாடலான 'ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா...' பாடலைத்தான் பலரும் சொல்வார்கள் (ஹிந்தோள ராகத்தில் அது உண்மையில் ஒரு அருமையான பாடல்). இருந்தும், K.J.ஜேசுதாஸ் பாடினார் என்பதனாலேயே, ராதிகாவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் சுமன் பாடுவது போல அமைந்த 'வச்ச பார்வ தீராதடி...' பாடலும் எண்பதுகளின் துவக்க காலத்தில் ஒரு ஹிட்டானது.


ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஹிந்தி படமான ஜும்ரானாவைத் (அமிதாப், ராக்கி, வினோத் மெஹ்ரா நடித்தது) தழுவி வந்த இந்தப் படத்தின் தோல்விக்கு ஏராளமான காரணங்களைக் கூறலாம். யாரும் உருப்படியாக நடிக்காத இந்தப் படத்திற்கு K.பாக்யராஜின் கதை வசனமும்கூட கை கொடுக்கவில்லை.




பாடலைக் கேட்க சொடுக்குங்கள் இங்கே

Labels:

Sunday, April 29, 2007

வாணி ஜெயராம் - 2 பாடல்கள்





கானக்குயில் வாணிஜெயராம் அவர்கள், வசீகரமானக் குரல் கொண்டவர் என்றாலும், சித்ரா, S. ஜானகி, P.சுசீலா அளவிற்கு அவர் பிரபலமாகாததற்குக் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் பாடிய பல பாடல்கள் அவரது இனிமையான குரலின் காரணமாகவே ஹிட்டானதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் நீங்கா நிற்கும் பாடல்களாகவும் பல ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது என்னவோ உண்மை.


1979ல் இளையராஜாவின் இன்னிசையில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெறும் 'என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...' பாடலும் 'நானே நானா யாரோதானா...' பாடலிலும் பல பரிமாணங்களைக் காட்டியிருப்பார். 'நானே நானா...' பாடலில் நாயகி, melancholic moodல் தன் உள்ளத்து உணர்சிகளை ஒருவித மயக்கத்தோடு வெளிப்படுத்துவதுபோல் அமைந்துள்ள சூழலில், வாணி ஜெயராம் வழக்கமாகத் தன் குரலில் தொனிக்கும் அந்த இயல்பான assertivenessஸையும் மீறி, மிக நேர்த்தியாகவும், கவனமாகவும் இதமாகவும் துயரத்தின் விளிம்பு நிலையைக் கொண்டுவந்திருப்பார். சோகம் தவழும் இந்தப் பாடலின் இசை, சென்னைத் தொலைக்காட்சியின் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சிக்கான ட்யூனாகவும் வெகுகாலம் விளங்கியது என்பது இளையராஜாவிற்குப் பெறுமை சேர்க்கிறது. பாடலைக் கேட்க சொடுக்கவும் இங்கே

லதா என்றாலே MGR-ஓடு பாடிய டூயட் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவர் தனக்கு யதார்த்தமாகவும் நடிக்க வரும் என்பதை வட்டத்துக்குள் சதுரம் (இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்...) மற்றும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படங்களில் நிரூபித்திருக்கிறார். இதுவும் இன்னொரு ஸ்ரீதர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***

1978ல் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும் ஒரு பாடற்காட்சி (என்னடி மீனாட்சி...) நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில்தான் படமாக்கப் பட்டது. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா முதலியோர் வந்திருந்தார்கள். யாரும் என் கண்ணில் படவில்லை என்றாலும் நான் வேடிக்கைப் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங் அதுதான் எனலாம். 'சம்பவ இடத்தில்' திரும்பத் திரும்ப அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டதனால், பள்ளிப் பருவத்தில், அந்தப் பாடலையே அதிகம் விரும்பிக் கேட்க நேர்ந்தது; காலையில் விவித் பாரதியின் 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சியில் கேட்க நேரிட்டால் அன்றைய பொழுது மிக்க மகிழ்ச்சியாயிருக்கும்; பாடலின் முதல் சில வரிகளை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருந்த காலம் அது.

படம் வெளியான பின்னர் எப்படியும் பார்த்தே ஆகவேண்டும் என்ற என் ஆசை என்னமோ நீண்ட நாட்களுக்குப் பின்னர் சன் டிவி மூலமாகத்தான் நிறைவேறியது. இந்தப் படத்தில், இளையாரஜாவின் இசையில் வாலியின் பாடல் ஒன்றினை வாணி ஜெயராம் மிக அழகாகப் பாடியிருப்பார்.

பாடலைக் கேட்க சொடுக்குங்கள் இங்கே



ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ராஜேஷ் கன்னாவும் ஷத்ருகன் சின்ஹாவும் நடித்த படம். தூர்தர்ஷனில் பார்த்த நியாபகம். ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா கதாபாத்திரங்களில் யார் யார் நடித்தார்கள் என்று நினைவிலில்லை.
***

Labels:

Sunday, April 15, 2007

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்...



ராமு படத்தில் வரும் இந்தப்பாடல் சினிமாவில் அரிதாகக் காணக் கிடைக்கும் பக்திப்பாடல் வகையில் வந்தது. ஜெமினி கணேசன், K.R.விஜயா நடித்து 1966ல் வெளிவந்த ராமு படத்தில் வரும் எல்லா பாடல்களுமே மனதிற்கினைமையான பாடல்கள்தான். எனினும், உண்மையான மனதிற்கினிமை என்பது ஆண்டவன் சந்நிதானம்தான் என்று நம்புவோர்க்கு கவிஞரசர் கண்ணதாசனின் இந்தப்பாடல் நிச்சயாமாக நிறைவைத்தரும் பாடலாக விளங்குகிறது. மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதனின் இதமான இசையயும், சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலும், பக்தர்களோடு பக்தராக நின்று மனமுருகப் பாடும் பெரியவராக வரும் நாகையாவின் பாத்திரப்படைப்பும் பக்தி ரசம் சொட்டும் இந்தப் பாடற்காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.






சீர்காழி. கோவிந்தராஜன், T.M.சௌந்தரராஜன் குழுவினர் குரலில் பாடலைக் கேட்க இங்கே click செய்யுங்கள்... "கண்ணன் வந்தான் அங்கெ கண்ணன் வந்தான்..."

Labels:

Tuesday, April 10, 2007

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

ஜெமினி கணேசன், சாவித்திரி, ஜமுனா, S.V.ரங்கா ராவ் நடித்து 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் நான் அதிகம் ரசித்து லயித்த பாடல்களில் ஒன்று. A.M.ராஜாவும், P.சுசீலாவும் பாடிய தஞ்சை ராமையா தாஸ் பாடலுக்குத் தேனினும் இனிமையான இசை அமைத்தவர் S.ராஜேஸ்வர ராவ். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் - 'வாராயோ வெண்ணிலாவே...', 'பழகத்தெரிய வேணும்...' தெலுங்கில் NTR நடித்த பாத்திரத்தில், தமிழிலும் பின்னர் ஹிந்தியிலும் (மிஸ். மேரி- 1957ல்) கூட ஜெமினி கணேசனே நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜமுனா... அரசியல் கலப்பில்லா புன்சிரிப்பு!










'மிஸ்ஸியமா'வில் ஜெமினி கணேசன் - சாவித்திரி (1955)
to listen the song click here - Brindhaavanaum Nandhakumaaranum...
ராஜா: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
P. சுசீலா: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
ராஜா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
சுசீலா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ

ராஜா: புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
சுசீலா: புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
ராஜா: ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா
சுசீலா: ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ

ராஜா: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா
சுசீலா: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா
ராஜா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
* * *

Labels: