பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Tuesday, April 10, 2007

பிருந்தாவனமும் நந்தகுமாரனும்

ஜெமினி கணேசன், சாவித்திரி, ஜமுனா, S.V.ரங்கா ராவ் நடித்து 1955ல் வெளிவந்த மிஸ்ஸியம்மா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் நான் அதிகம் ரசித்து லயித்த பாடல்களில் ஒன்று. A.M.ராஜாவும், P.சுசீலாவும் பாடிய தஞ்சை ராமையா தாஸ் பாடலுக்குத் தேனினும் இனிமையான இசை அமைத்தவர் S.ராஜேஸ்வர ராவ். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் - 'வாராயோ வெண்ணிலாவே...', 'பழகத்தெரிய வேணும்...' தெலுங்கில் NTR நடித்த பாத்திரத்தில், தமிழிலும் பின்னர் ஹிந்தியிலும் (மிஸ். மேரி- 1957ல்) கூட ஜெமினி கணேசனே நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஜமுனா... அரசியல் கலப்பில்லா புன்சிரிப்பு!


'மிஸ்ஸியமா'வில் ஜெமினி கணேசன் - சாவித்திரி (1955)
to listen the song click here - Brindhaavanaum Nandhakumaaranum...
ராஜா: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
P. சுசீலா: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
ராஜா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
சுசீலா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ

ராஜா: புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
சுசீலா: புல்லாங்குழல் இசை இனிமையினாலே
உள்ளமே ஜில்லென துள்ளாதா
ராஜா: ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா
சுசீலா: ராகத்திலே அனுராக மேவினால்
ஜெகமே ஊஞ்சலில் ஆடாதா
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ

ராஜா: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா
சுசீலா: கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் தன்னையே மறந்திடச் செய்யாதா
ராஜா: ஏனோ ராதா இந்த பொறாமை, யார்தான் அழகால் மயங்காதவரோ
இருவரும்: பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொதுச்செல்வமன்றோ
* * *

Labels:

7 Comments:

At 12:51 PM, Blogger வைசா said...

இந்தப் பாடலை இங்கே கேளுங்கள்.

வைசா

 
At 2:08 PM, Blogger கானா பிரபா said...

nice song

 
At 11:11 AM, Anonymous Anonymous said...

இந்தப் பாடல் மிக இனிமையானது.
எடுத்து வைத்திருக்கிறேன்.

"மன்னவன் வந்தானடி...." என்று
பதுமினியின் நடனப்பாடல் ஒன்று
திருவருட்செல்வர் என்ற படத்தில்
வரும்.
மிக அருமையான பாடல்.


உங்களுக்கு அந்தப் பாடல் கிடைத்தால்
அன்புடன் எனக்கு அனுப்பியோ அல்லது தங்கள் பதிவில் போட்டோ
உதவுங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

 
At 4:16 PM, Blogger nagai.s.balamurali said...

அருமை!

 
At 10:39 PM, Blogger Bharateeyamodernprince said...

வைசா, கானா பிரபா, நாக.இளங்கோவன், nagai.s.balamurali... yen nenjaarndha nandri.

 
At 11:18 AM, Blogger Bharateeyamodernprince said...

அன்புச் சகோதரர் இளங்கோவன் அவர்களே...
P.சுசீலா அம்மையாரின் பாடல்களுக்கென உள்ள வலைத்தளத்தில் (www.psusheela.org) திருவருட்செல்வர் படத்தில் வந்த நீங்கள் குறிப்பிட்ட அந்த அருமையான பாடலும் இடம் பெற்றுள்ளது. கண்ணதாசனின் கவின்மிகு தமிழும், பத்மினியின் நடனமும் கே.வி.மகாதேவன் இசையும், எல்லாவற்றையும் விட கானக்குயில் P.சுசீலாவின் இனிமையான குரலும் பாடலை ஒரு உன்னத நிலைக்கு உயர்த்துகிறது.

பாடல் lyrics வலைப்பக்கம் இங்கே உள்ளது-> http://psusheela.org/tam/show_lyrics.php?id=2344

 
At 11:29 PM, Blogger Chandravathanaa said...

எனக்கும் பிடித்த பாடல்.
இனிமையான பாடல்.

 

Post a Comment

<< Home