பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, March 20, 2008

ரகுவரன் வயது 60?!

"நடிகர் ரகுவரனா?! எப்போ..??"

"ஆமாம்! இப்பத்தான் எனக்கே தெரியும். என் மச்சான் தான் சொன்னான்"

"எப்படி?"

"கார்டியாக் அரெஸ்ட்டாம். 2 days அட்மிட் ஆயிருந்தார் போல. உனக்கே தெரியும் டிரக் அடிக்டாயிருந்தவரு; மது, மற்றும் பல கவலைகள். வயசு 60"

"என்ன உளர்ற.. வயசு 60ஆ?"

"நிஜமாப்பா. 1948ல பொறந்ததா விக்கீப்பீடியாவில காலைல பார்த்தேன்"


***
MEDIA COVERAGE:
BLOGGERS COVERAGE


Actor Raghuvaran turns 60 on death?!

ரகுவரன் மறைந்த செய்தியைப்போலவே அவரது வயது குறித்து பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்தியும் எனக்கு அதிர்ச்சியாய்த்தான் இருந்தது. பாருங்கள்... ஹிந்து, தினமலர், Deccan Herald, NDTV.com, Sify.com என்று பல பத்திரிக்கைகளும் வலைத்தளங்களும், 'இட்லிவடை', 'சற்றுமுன்' உள்ளிட்ட பல வலைப்பதிவுகளும், காலையில் கண்ட விக்கிப்பீடியாவும் ரகுவரனின் வயதை 60 ஆகவே குறிப்பிட்டுள்ளது. உண்மையில் ரகுவரன் 49 வயதே நிறைந்தவர் என்று மாலையில் ஒரு நண்பர் எனக்கு மெஸேஜ் அனுப்ப, நான் அவருக்கு பதில் சொல்ல இணையத்தை மீண்டும் அலசிபோது விக்கீப்பீடியா மட்டும் தன் தவற்றை திருத்திவிட்டிருந்தது

***

சத்யராஜிற்கு அடுத்தபடியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அதிக ரசிகர்களைக் கவர்ந்தவர் ரகுவரன்தான்.

ரகுவரனின் சொந்த வாழ்க்கை சோக வாழ்க்கையாக இருக்கலாம். ஆனால், அவர் திரையில் எத்தனை சிறிய கதாபாத்திரமானாலும், படத்தில் அவரது நுழைவுக் காட்சியில் ரசிகர்களது கைதட்டலுக்கு 100 சதவித கியாரண்டி கொடுக்கலாம்.

ஸ்ரீதர் மற்றும் மலையாள இயக்குனர் ஃபாசில் (பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவிற்கு) தவிர வேறு எந்த இயக்குனர் சிகரங்களும் அவரது திறமையைப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை எனக்கு. திறமைமிக்கக் கலைஞர்களை உற்சாகப்படுத்தும் பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற இயக்குனர் சிகரங்களின் படங்களில், ஒரு காட்சியில்கூடத் தலைகாட்டாமலும் கமலஹாசனுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்காமலும், தமிழ் சினிமாவில் உலாவிய ஒரு சிறந்த திறமைமிக்க நடிகர் அநேகமாக ரகுவரன் ஒருவராகத்தான் இருப்பார். மணிரத்தினம் ‘அஞ்சலி’யில் மட்டும் வாய்ப்பு கொடுத்திருப்பார். அப்புறம் ஏன் அவரும் கைவிட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

***
ரகுவரன்-சுமலதா நடித்த பாடற்காட்சியான ‘தலையைக் குனியும் தாமரையே...” (SPபாலசுப்ரமணியன்) பாடலையோ அல்லது அதே படத்தில் இடம் பெற்ற ‘தென்றல் வந்து என்னைத் தொட்டது...’ (SN சுரேந்தர்) பாடலையோ ரகுவரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில்,
வலையேற்றுமாறு கானா பிரபா அவர்களை இந்தப் பதிவின் மூலமாகத் தாழ்மையுடன் கொள்கிறேன்.

***

Click below to read the recent article in The Hindu (22nd February 2008):
http://www.thehindu.com/fr/2008/02/22/stories/2008022250750100.htm

Labels: , ,

8 Comments:

At 9:54 AM, Blogger SP.VR. SUBBIAH said...

ஒன்னைக்கூட பாக்கி வைக்கல போலிருக்கே!

 
At 5:40 AM, Blogger ஜீவா (Jeeva Venkataraman) said...

LOL!

என் மனைவியும் தொலைக்காட்சி செய்தி அறிவித்ததும் - வயது அறுபதா? - என்று கொஞ்ச நேரத்திற்கு கேட்டுக்கொண்டே இருந்தார்!

 
At 12:19 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

SP.VR. SUBBIAH, ஜீவா (Jeeva Venkataraman)... வருகைக்கு நன்றி. இன்னமும், தமிழ் விக்கிப்பீடியாவில் ரகுவரன் 1948ல் பிறந்தவர் (59 வயது) என்றுதான் போட்டு இருக்கிறது!

அவரைப் பார்த்தால் அவ்வளவு வயசானவர் மாதிரியா இருக்கிறது?

 
At 11:43 AM, Blogger கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

நான் இப்போது விடுமுறையில் சிங்கப்பூர்ல் நிற்கின்றேன். வரும் திங்கட்கிழமை உங்கள் கோரிக்கையினை நிறைவேற்றுகின்றேன்.

 
At 11:43 AM, Blogger கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

நான் இப்போது விடுமுறையில் சிங்கப்பூர்ல் நிற்கின்றேன். வரும் திங்கட்கிழமை உங்கள் கோரிக்கையினை நிறைவேற்றுகின்றேன்.

 
At 9:17 PM, Blogger nayanan said...

நண்பர் இளவரசர்,

இரகுவரன் எனக்கு மிகவும் பிடித்த வெகுசில நடிகர்களில் ஒருவர்.
செய்தி அறிந்தபோது மிகவும் வருத்தப் பட்டேன். 3/4 ஆண்டுகளுக்கு முன்னர்
வெங்காலூர் பறனை நிலையத்தில்
அவர் இருந்ததைப் பார்த்தேன். அந்த நினைவில் 60 வயது இருக்காது என்றே எண்ணினேன். இருப்பினும்
வந்த செய்திகள் அப்படி நம்பும்படியே இருந்தன :)

அன்புடன்
நாக.இளங்கோவன்

 
At 9:38 PM, Blogger vijay said...

இளவரசன்,

முதல்டதடவையாக வருகிறேன் உள்ளே.

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.

ரகுவரன் சிறந்த நடிகர். ஓரு சிறந்த கலைஞனை தமிழ் நாடு இழந்துவிட்டது.

 
At 6:13 AM, Blogger Vijay said...

He is a very good actor. It is definitely a loss to the industry.

 

Post a Comment

<< Home