பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, March 06, 2008

மகாசிவராத்திரி - அழைப்பிதழ் (ஈஷா யோகா பவுண்டேஷன்)

***
மகாசிவராத்திரி அழைப்பிதழ் வீடியோ மற்றும் முந்தைய வருட மகாசிவராத்திரி விழா வீடியோ (click to see)

***
பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் இன்று (6-மார்ச்) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஈஷா யோகா ஃபவுண்டேஷன் சார்பில் நடைபெறும் ஆனந்த பரவச நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறேன்.
***

ஒன்றானவன், உருவில் இரண்டானவன்,
உருவான செந்தமிழில் மூன்றானவன்,
நன்றான வேதத்தில் நான்கானவன்,
நமச்சிவாய என ஐந்தானவன்!


இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்,
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்,
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்,
தித்திக்கும் நவரச வித்தானவன்!


பத்தானவன், நெஞ்சில் பற்றானவன்,
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன்,
முற்றாதவன் மூல முதலானவன்,
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்!


ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்,
அவையொன்று தானென்று சொன்னானவன்,
தான்பாதி உமைபாதி கொண்டானவன்,
சரிபாதி பெண்மைக்குத் தந்தானவன்!


காற்றானவன், ஒளியானவன், நீரானவன், நெருப்பானவன்,
நேற்றாகி இன்றாகி எனறைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பின் ஒளியாகி நின்றானவன்!

(கவியரசர் கண்ணதாசன் பாடல்)

***

Labels: ,

2 Comments:

At 3:13 AM, Blogger ஜீவா (Jeeva Venkataraman) said...

கலக்கறீங்க இளவரசன்!

 
At 8:35 PM, Blogger ரசிகன் said...

ஓ.. இது கண்ணதாசர் பாடலா?.. கந்தன் கருணை படத்தில் ,ஓளவையார் பாட்டி கேரட்டர் பாடின மாதிரி ஞாபகம் இருக்கு:)
அருமையான பாடல்.நன்றிகள்.

 

Post a Comment

<< Home