ஜேசுதாஸ் பாடல்கள்
1978ல் வயசுப் பொண்ணு படத்தில் மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் இசையில் கவிஞர் முத்துலிங்கத்தின் வரிகளில் வரும் இந்தப் பாடலும் சின்ன வயசில் நான் பலமுறை வானொலியில் கேட்டு ரசித்த K.J. ஜேசுதாஸ் பாடல். சின்னத்திரையில் இதுவரை பார்க்க வாய்க்கவில்லை. பாடற்காட்சி எப்படி இருக்கும் என்ற யூகமும் இல்லை; படம் பற்றிய தகவலும் இல்லை (பார்த்தவர்கள் கூறுங்களேன், படத்தையும், பாடலையும் பற்றி...).
இந்தப் பாடலை கேட்க சொடுக்கவும் இங்கே
***
பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் 'அடிக் கானக் கருங்குயிலே...' பாடலிலும் தளபதி படத்தில் 'காட்டுக் குயிலு மனசுக்குள்ள...' பாடலிலும் K.J.ஜேசுதாஸ் பாடியது அவரது மற்ற பாடல்களிலிருந்து வேறுபட்டு ஒருவித புது ரசனை அனுபவத்தை ரசிகர்களுக்குத் தந்தது. இதற்கு வெகுகாலம் முன்னரே, அதாவது 1980ல் இளமைக் கோலம் படத்தில் வரும் இசைஞானி இளையராஜாவின் இசையில் கங்கை அமரனின் வரிகளில் வந்த இந்தத் துள்ளல்வகைப் பாடல், ஜேசுதாஸ் பாடியதனாலேயே ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.
இந்தப் படத்தில் சிறந்த பாடல் எது என்றால் நிச்சயம் ஜேசுதாஸ் பாடிய மற்றொரு பாடலான 'ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா...' பாடலைத்தான் பலரும் சொல்வார்கள் (ஹிந்தோள ராகத்தில் அது உண்மையில் ஒரு அருமையான பாடல்). இருந்தும், K.J.ஜேசுதாஸ் பாடினார் என்பதனாலேயே, ராதிகாவைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் சுமன் பாடுவது போல அமைந்த 'வச்ச பார்வ தீராதடி...' பாடலும் எண்பதுகளின் துவக்க காலத்தில் ஒரு ஹிட்டானது.
ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஹிந்தி படமான ஜும்ரானாவைத் (அமிதாப், ராக்கி, வினோத் மெஹ்ரா நடித்தது) தழுவி வந்த இந்தப் படத்தின் தோல்விக்கு ஏராளமான காரணங்களைக் கூறலாம். யாரும் உருப்படியாக நடிக்காத இந்தப் படத்திற்கு K.பாக்யராஜின் கதை வசனமும்கூட கை கொடுக்கவில்லை.
Labels: திரையிசைப் பாடல்கள்
2 Comments:
பல நல்ல பாடல்களை நினைவு படுத்தினீர்கள். கேட்டு மகிழ்ந்தேன். தகவல்களும் கிடைத்தன.
நன்றி சந்திரவதனா அவர்களே.
KJயேசுதாஸ், சிந்து பைரவி படத்தில் 'தண்ணித்தொட்டி தேரிவந்த கன்னுக்குட்டி நான்...' என்று பாடியிருப்பார்...அதுவும் இதே வகைப்பாடல்தான்..
Post a Comment
<< Home