கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்...


ராமு படத்தில் வரும் இந்தப்பாடல் சினிமாவில் அரிதாகக் காணக் கிடைக்கும் பக்திப்பாடல் வகையில் வந்தது. ஜெமினி கணேசன், K.R.விஜயா நடித்து 1966ல் வெளிவந்த ராமு படத்தில் வரும் எல்லா பாடல்களுமே மனதிற்கினைமையான பாடல்கள்தான். எனினும், உண்மையான மனதிற்கினிமை என்பது ஆண்டவன் சந்நிதானம்தான் என்று நம்புவோர்க்கு கவிஞரசர் கண்ணதாசனின் இந்தப்பாடல் நிச்சயாமாக நிறைவைத்தரும் பாடலாக விளங்குகிறது. மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதனின் இதமான இசையயும், சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலும், பக்தர்களோடு பக்தராக நின்று மனமுருகப் பாடும் பெரியவராக வரும் நாகையாவின் பாத்திரப்படைப்பும் பக்தி ரசம் சொட்டும் இந்தப் பாடற்காட்சிக்கு மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்திருந்தது.




சீர்காழி. கோவிந்தராஜன், T.M.சௌந்தரராஜன் குழுவினர் குரலில் பாடலைக் கேட்க இங்கே click செய்யுங்கள்... "கண்ணன் வந்தான் அங்கெ கண்ணன் வந்தான்..."





Labels: திரையிசைப் பாடல்கள்
4 Comments:
ஆஹா அருமையான பாடலை ஆன்லைனில் கேட்டு மகிழ்ந்தேன்!
நன்றி!
Very nice presentation :) Happy to see a blog like this
நல்ல பாடல்..முதன்முறையாக கேட்டேன்...
வருகைக்கு நன்றி Nagai.S.Balamurali.
நன்றி sowmya. நன்றி தூயா.
Post a Comment
<< Home