பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Friday, January 05, 2007

சவுதி அரேபிய நினைவுகள் - 2006 புகைப்படங்கள்

ரியாதிலிருந்து ஒரு 100 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமத்தில் விருந்து (பக்ரீத் விடுமுறையில்).... சாப்பிடுவது black teaதான்.
கையில் இருப்பது சிகரேட் (ஃபோட்டோவிற்காக மட்டும்...சத்தியமா!)
'கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பு'


என் அலுவலக அறையில் நான்............

உண்மையிலேயே சற்று பிஸி...


தொடரும்....

Tuesday, January 02, 2007

இரண்டு சினிமாக்கள்

ZEE Cinemaவில் இன்று காலை 6:00 மணிக்கு சிட்சோர் (Chitchor, அதாவது இதயத் திருடன்) என்ற ஹிந்தி படம் ஓளிபரப்புகிறார்கள் என்ற செய்தியை காலை 8:00 மணியளவில்தான் ஹிண்டு பேப்பரில் கண்டேன். அமோல் பலேகர், ஜரீனா வஹாப் நடித்தது. ரவிந்திர ஜெயினின் தேனினும் இனிய மெல்லிசை படம் மூழுக்க வந்தாலும், பாடல்களில் நமது KJ ஜேசுதாஸின் சுந்தரமான குரல் நம்மை எங்கோ கொண்டு செல்லத்தான் செல்கிறது. சிலருக்கு Chitchor என்ற உடன் KJ ஜேசுதாஸ் நியாபகத்திற்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்தப் படப் பாடல்களுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இன்று கடைசி அரைமணி நேரப் படத்தை மட்டுமே காண நேர்ந்தது. இருந்தாலும், பல வருடங்களுக்கு முன்பு, தூர்தர்ஷனில் பார்த்தது இன்னும் பசுமையான நினைவில் உள்ளது. மிகவும் எளிமையான கதைதான். ஒரு கிராமத்தில் பாலம் அமைப்பதற்காக ஒரு இஞ்ஜினியர் (அமோல் பலேகர்) வருகிறார். அவரைத் தன் மகளுடன் (ஜரீனா வகாப்) பழகவிடுகிறார் மகளின் பெற்றோர். இருவருக்கிடையேயும் காதல் மெல்ல மலர்கிறது. போகப்போகத்தான் தெரிகிறது அமோல் எஞ்ஜினியர் இல்லை, சூப்பர்வைசர்தான் என்று. ஒருகட்டத்தில் இஞ்ஜினியரே (விஜயேந்திர காட்கே) வரும் போது, தன் மகளிற்கு அவரை மணம் முடித்துவைக்க விழைகின்றனர் பெற்றோர். அமோலும், ஜரீனாவும் கடைசியில் சேர்கிறார்களா அல்லது ஜரீனா, விஜயேந்திர காட்கேயைக் கைபிடிக்கிறாரா என்பதுதான் கதையின் க்ளைமாக்ஸ்.
பாசு சேட்டர்ஜியின் அருமையான இயக்கத்தில் இந்தப் படம் 1975ல் வெளிவந்தது. அமோல் பலேகருக்கு இது 5ஆவதோ 6ஆவதோ படம் நினைக்கிறேன். பாசு சாட்டர்ஜி-அமோல் பலேகர் ஜோடி இதற்கு முன்பும் இரண்டு வெற்றிபடங்களைத் தந்தது - அவை, ரஜினிகந்தா (Rajnigandha) மற்றும் சோட்டி சி பாத் (Choti Si Baath). பின்னாட்களில் (1979 வாக்கில்) இதே ஜோடியின் கைகோர்ப்பில் வெளிவந்த பாத்தோம் பாத்தோம் மேயின் (Baaththon Baaththon Mein). அமோல் பலேகரின் மற்றோரு படமும் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வந்த நகைச்சுவைப் படமான கோல்மால் (Golmol) என்னைக் கவர்ந்த இன்னோரு படம் (இதையே தமிழில் பாலச்சந்தர் ரஜினியை வைத்து எடுத்தார்).

சிட்சோர்தான் நான் முழுமையாகப் பார்க்க முடியாமற் போனது. மற்றபடி, மதியம் ஏசியாநெட்டில் 1:30க்கு ஒளிபரப்பிய அங்ஙனே ஓரு அவதிக்காலத்து என்ற மலையாளப் படத்தினை நான் காணத் தவறவிடவில்லை. சீனிவாசன், சம்யுக்தா வர்மாவின் இயல்பான நடிப்பில் வெளியான மற்றுமொரு எளிமையான படம். என்ன காரணத்தாலோ படம் கேரளத்தில் வெற்றி பெறாமற் போனது. சாதாரணமான கதை தான்; இன்னும் கேட்டால், ரொம்பவே சிம்பிளான ப்ளாட்தான் - சீனிவாசன் தன்னோடு பள்ளியில் பணிபுரியும் சகடீச்சரான சம்யுக்தா வர்மாவை காதலிக்கிறார்; ஆனால் தன் காதலை அவரிடம் சொல்ல சீனிவாசனுக்குத் துணிச்சல் இல்லை. ஒருகட்டத்தில், ஒரு துரதிருஷ்டமான சூழ்நிலையில், சீனிவாசனும், சம்யுக்தாவும் செய்யாத குற்றத்திற்காக போலிசில் சிக்குகின்றனர். குற்றத்திலிருந்து சம்யுக்தா தப்பிவிடுகிறார்; ஆனால், சீனிவாசன் சிறைக்குச் செல்ல சம்யுக்தா காரணமாகிவிடுகிறார். இரண்டாண்டு சிறைதண்டனை முடிந்து சீனிவாசன் திரும்புகையில், அவருக்கு முகேஷின் நட்பு கிடைக்கிறது. முகேஷே சீனிவாசனிற்குப் புதிய வேலையும் வாங்கிக் கொடுக்கிறார். இதற்கிடையில், முகேஷிற்கும், சம்யுக்தாவிற்கும் திருமணம் நிச்சயமாகிறது. பெண் பார்க்கும் படலத்தில், சம்யுக்தாவும் சீனிவாசனும் இரண்டு வருட இடைவேளைக்கும் பிறகு எதிர்பாராவிதமானதொரு சூழலில் சந்திக்கின்றனர். சம்யுக்தா, சீனிவாசனோடு சேர்கிறாரா? அல்லது முகேஷை மணக்கிறாரா என்பதுதான் க்ளைமாக்ஸ் (Chitchorஇன் க்ளைமாக்ஸ் தந்த அதே எஃபெக்ட்).

சீனிவாசனின் யதார்த்தமான நடிப்பு....அவருக்கே உரித்தான இயல்பான காமெடி, அங்கதம் கலந்த பேச்சு, பெரிய ஹிரோ போன்ற தோற்றம் இல்லை என்றாலும் அவரது பாந்தமான நடிப்புத்திறன் அவரது ரசிகர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. சீனிவாசனை ஜெயிலுக்குப் போகக்காரணமான சம்யுக்தா வர்மா சொல்லும் சாக்குதான் எடுபடவில்லை. அதனாலேயேதான் படம் தோல்விஅடைந்ததோ?

Labels:

Monday, January 01, 2007

ஹேப்பி ந்யூ இயர்! ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி ஒன்றாம் தேதியில், 'ஹேப்பி ந்யூ இயர்' என்று யாராவது என்னை வாழ்த்தும்போதெல்லாம், `ந்யூ இயருக்குத் தான் இன்னும் மூன்றறை மாதங்களிருக்கிறதே, அதற்குள் என்ன அவசரம். ஓ.. அட்வான்ஸா சொல்றீங்களா? நன்றி, உங்களுக்கும் எனது அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்' என்று யதார்த்தமாகவே அவர்களுக்கு நான் பதில் சொன்னாலும், நான் ஏதோ நக்கல் பண்ணுவதாய்த் தான் பலரும் எண்ணியிருப்பார்கள். `ஏன்..என்னாச்சு இவனுக்கு, யாரோ இவன் மனசைக் குழப்பியிருக்கிறார்கள்' என்றும் பலர் நினைத்திருக்கக்கூடும். டிசம்பர் 31ஆம் தேதி நடு இரவு, அதாவது புத்தாண்டு பிறக்கும் அந்தச் சுபவேளையில், உலகெங்கிலும் உள்ள கிருஸ்தவ தேவாலயங்களில், சிறப்புப் பிரார்த்தனைகளும், ஜபங்களும் நடைபெறும். இங்கும் சில ஆர்வலர்கள், ஆங்கிலப் புத்தாண்டின் பிறப்பை வரவேற்கும் விதத்திலோ அல்லது வேறு நல்லதொரு பொதுநோக்குடனோ, நமது கோயில்களிலும் நள்ளிரவில் சிறப்பு வழிபாடுகளுக்கு (அர்ச்சனை, அபிஷேகம், தீப ஆராதனை) ஏற்பாடு செய்தால், உடனே மேற்கத்தியக் கலாச்சாரப் படையெடுப்பு, அந்நிய மோகம்...என்றெல்லாம் நான் அவைகளை வசைமொழிந்ததும் உண்டு. சீனாவிலும், அரேபியாவிலும், இந்த மோகம் இல்லை என்று வாதாடியிருக்கிறேன். ஆங்கிலத்திற்கும், ஆங்கிலப் புத்தாண்டிற்கும் எதிரான புள்ளிவிவரங்களையும், தகவல்களயும் சேகரிப்பதில் நான் காட்டிய ஆர்வத்தை நினைக்கும்போது இன்று வெட்கமாக இருக்கிறது. "If you can't beat them, go around them, adapt, but keep your goal in sight" போன்ற அறிவுரைகளெல்லாம் துச்சமாக எண்ணிய காலம் அது.

இதுபோன்ற துவேஷத்திற்கெல்லாம் முக்கிய காரணம் - தாழ்வு மனப்பான்மைதான் என்பது டொம்ப லேட்டாகத்தான் எனக்குப் பிடிபட்டது; மற்றொரு காரணம் - lack of positive ideology எனலாம். காலம் காலமாக நம்மைக் காத்து நின்ற பழைய தத்துவங்களையும் உதாசினப் படுத்திவிட்டோம். நமது கலாச்சாரம் சார்ந்த ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கவும் தவறிவிட்டோம். காலத்திற்கேற்ற மாற்றங்களுக்கு நம்மைத் தயார்செய்துகொள்ளவும் தயங்குகிறோம்.

சதாம் உசேனைத் தூக்கிலிட்ட துயரச் சம்பவம் தொடர்பாக, அமெரிக்க எதிர்ப்புக் குரல்கள் என் காதில் பலமாகவே கேட்கிறது. சதாம் ஆதரவு மக்களுக்கு ஒரு விஷயம் அவசியம் புரிந்தாக வேண்டும் - சதாமிற்கு கொடுக்கப் பட்ட தண்டனையை எதிர்க்கும் பிற தேசத்தினரெல்லாம், உண்மையில் சதாம் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்று நினைப்பவர்கள்..இவர்கள் குரல் கொடுப்பது சதாமிற்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிராக அல்ல, இவர்களது கோஷங்களெல்லாம் ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்காவை எதிர்த்துத்தான். இங்கு நம் காதில் விழுவதெல்லாம் anti-america சத்தங்கள்தான், pro-saddam sentiment இருப்பதாகத் தெரிவதில்லை. சதாம் தன் மீதும், தன் விசுவாசிகள் மீதும் வைத்திருந்த நம்பிக்கையைவிட இந்த அமெரிக்க எதிர்ப்புக் கோஷங்களைத்தான் அதிகமாக நம்பினார்; அதனாலேயே வீழ்ந்தார்.

துவேஷங்களுக்குக் காரணமான இந்தத் தாழ்வு மனப்பான்மை எங்கிருந்து வந்தது...? இந்தத் தாழ்வு மனப்பான்மை நம்முள் குடிகொண்டிருந்தால், நாம் எந்த ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது; போர்குணமும், ஆதிக்க மனப்பான்மையும் கூட ஒருவகையில் பரவாயில்லையோ என்றுகூடப் படுகிறது. காரணம் அவை `பாசிடிவ்' சிந்தனைகளை வளர்க்கிறது...நான் தான் பெரியவன் என்ற எண்ணம், `ஜெயிக்க முடியும்' என்கிற தன்னம்பிக்கையையாவது தருகிறது. சதாமிற்குக்கூட பாசிடிவ்வான சிந்தனைகள்தான் ஆரம்பகால வெற்றிகளைத் தந்தது.

அண்மையில் தென்னாப்பிரிக்காவில் தோல்விமேல் தோல்வியைத் தழுவிக்கொண்டிருக்கும் (முதல் டெஸ்ட் வெற்றி நீங்கலாக) இந்திய கிரிக்கெட் அணிக்கு வெந்தபுண்னில் வேல் பாய்சுவது போல் இருந்தது ஒரு விஷயம். அது - தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்திய ஃபீல்டர்கள் அதிகபட்சமாக appeal செய்ததாகக் குற்றம் சாட்டி, Mike Denness இந்திய அணியினருக்கு அபராதம் அளித்த சம்பவம். உடனே நமது கிரிக்கெட் நிர்வாகம் பிரச்சனையை எவ்வாறு அணுகியது தெரியுமா? இந்திய அணியிற்கெதிராக ஒருவித racial biasஐ காண்பிப்பதாகச் சுட்டிக்காட்டியது. நமது கிரிக்கெட் நிர்வாகத்தின் இந்தப் போக்கினைப் பற்றி Infosys நிறுவனர் திரு. நாராயண மூர்த்தி சொல்லும் பொழுது `performance exudes power and if India dominates the world on the field, it will also dominate most matters off it' என்று குறிப்பிட்டார். திறமை, அறிவு, ஆற்றல், நம்பிக்கை இதெல்லாம்தான் நம்மை சிறப்பாகச் செயல் உதவும். ஆக இந்த நான்கையும் வளர்த்துக்கொண்டால், உண்மையிலேயே நல்ல performanceஐ நாம் தர முடியும்; அதுவே அதிகாரம் கிடைக்க வழிகோலும்; அதிகாரம் கையில் கிடைத்தால், அப்புறம் நம்ப ராஜ்ஜியம்தான்.

நான் ஏன் இதுபற்றியெல்லாம் நீளமாக எழுதுகிறேன் என்றால், `தமிழிசை' பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு நேற்று சென்றிந்தேன். பேசிய பெரும்பான்மயோர் தமிழிசையை விட்டு விட்டு, இரண்டு விஷயங்களை மாறிமாறி சாடினர் - ஒன்று, இன்றைய தமிழ் சினிமாப்பாடல், மற்றொன்று, கர்நாடக சங்கீதம். தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இடம்பெறும் ஆங்கிலச் சொற்களும், டிஸம்பர் கச்சேரிகளில் தமிழ் பாடல் பாடாத பாடகர்களும்தான் இவர்களது ஆதங்கத்திற்குக் காரணமாம். தமிழிசையைக்கு ஆதரவு நல்கும் நோக்கம் அவர்களிடம், எள்ளளவும் காணப்படவில்லை.

Positive thoughtsற்கு ஒரு உதாரணம் சொல்லி முடிக்கிறேன்...நான், அமிதாப் பச்சனையோ, அப்துல் கலாமையோ, ஆல்பர்ட் ஐன்ஸ்டினையோ உதாரணமாகச் சொல்லப்போவதில்லை; என் அத்தை மகள்....எட்டாவது வரை தமிழகத்தின் தெற்கே உள்ள குக்கிராமத்தில் `கவர்மெண்ட்' பள்ளிக்கூடத்தில் (தமிழ் மீடியம்தான்!) படித்தார். ஒன்பதாவதும், பத்தாவதும் நகரப் பள்ளியில் படித்தார், அதுவும் தமிழில்தான். பின்னர், பதினொன்றாம் வகுப்பில்தான் முதன்முதலில் ஆங்கிலமீடிய அறிமுகம். அதுமுதல் பௌதீகத்தில் M.Phil பட்டம் படித்து சென்னன IITயில் பயிற்சியாளராக பணி ஏற்கும் வரை அவருக்கு, கான்வெண்ட் கல்வி மாணவ, மாணவியர் பெரும் சவாலாகவே விளங்கினர். இன்று அவர் எழுதும் ஆங்கிலக் கவிதைகளில் கவிதையும் இருக்கிறது, நல்ல ஆங்கிலமும் இருக்கிறது.

இன்று, 2007, ஜனவரி 1 ...தாழ்வு மனப்பான்மையைத் தூக்கிலிட்டு, இந்த இனிய நன்னாளில் `ஹேப்பி ந்யூ இயர்' என்று இந்த உலகிற்கு இன்முகத்தோடு சொல்வோமா? இல்லை, அமெரிக்க ஏகாதிபதியம் ஓழிக எனச் சொல்லிவிட்டு அடங்கிப் போகப்போகிறோமா?