பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, January 15, 2009

நானும் இலங்கைத் தமிழனும் நீங்களும்...

அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
ஒரு நாள் தாமதமாக இதைச் சொன்னாலும் ஒன்றும் குறைந்து விடாது.

"வீட்டில் ''எழவு' விழுந்திருக்கும்போது பண்டிகைகள் கொண்டாடுவது பற்றி யோசிப்பீர்களா?" என்று என்னுடன் பணிபுரியும் நண்பர் ஒருவர் என்னைக் கேட்டார். அவர் எதைப் பற்றி பேச வருகிறார் என்பதைப் புரிந்துகொண்ட நான், "Google-Earthல் உங்கள் மகள் படித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்க்க வேண்டுமென்று சொன்னீர்களே, காண்பிக்கிறேன் வாருங்கள்" எனப் பேச்சைத் திசைதிருப்பி அந்த மட்டக்களப்பு நண்பரை என் கணினிப் பக்கம் அழைத்துச் சென்றேன்.

***



"நீங்கள்
எந்த சாதிக்காரராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்
எந்த மதத்துக்காரராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்
எந்த நாட்டவராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்
எந்த கட்சிக்காரராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்
எந்த சினிமா நடிகரின் ரசிகராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்
எந்த தொழிலில் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்
ஆனால்,
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்கத் தயங்காதீர்..."

இப்படியான ஒரு மின்னஞ்சலை நேற்று காலை 'பொங்கல் வாழ்த்தோடு' இணைத்து அனுப்பியிருந்தார் என் தூரத்து உறவினர் ஒருவர்.

இலங்கைத் தமிழர்பால் என்ன இவருக்கு திடீர் அக்கறையென நான் வியந்துமுடிப்பதற்குள்... அவரிடமிருந்து வந்தது மற்றுமொரு மின்னஞ்சல்.

"மன்னிக்க வேண்டும் நண்பர்களே...
பொங்கல் வாழ்த்து சொல்லும் நல்லெண்ணத்தில்தான், எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை உங்களுக்கெல்லாம் அனுப்பினேன். ஆனால், அதில் இருந்த 'யெல்டீட்டி மேட்டர்' என் கண்ணில் படாததால், உங்களுக்கு அதையும் தவறுதலாகச் சேர்த்து அனுப்பிவிட்டேன்.. மன்னிக்கவும்" என்றார்.

அலுவலக வேலையில் மூழ்கியிருந்தமையால் அவருக்கு காரசாரமான ஒரு பதிலை உடனடியாக எழுத இயலவில்லை. இன்று காலை, சாவகாசமாக உட்கார்ந்து நீண்டதொரு மடலை அவருக்காக எழுதிக்கொண்டிருக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது - அட ஆட்சியாளர்கள் எப்படியோ, அவ்வழிதானே மக்களும் இருப்பார்களென்று. திருமங்கலம் தேர்தல் ஒரு திருவிழா போலவே நடந்து முடிந்துவிட்டது. காவிரி, முல்லைப்பெரியார் பிரச்சினையானாலும், ஈழத்தமிழர் பிரச்சினையானாலும், தேர்தல் இல்லாத காலங்களில் மட்டும்தானே வாய்கிழிய நாம் பேசுவோம் என்பதும் மறந்துபோனது.
என்னவோ... இத்தருணத்தில், வலைப்பதிவாளர் கணவான்களாகிய நாம், நம் தரப்பில் நாம் என்ன செய்யமுடியும்?
அதிகம் பேசாமல் ஒரு காரியம் செய்யலாம்...
மேலே காணும் பட்டையை போல் ஒன்றினை நம் வலைப்பதிவில் ஏற்றலாம்..

அல்லது Stop War on Tamils என்ற தலைப்பில் 'பட்டை தயாரிப்பு போட்டி' ஒன்றினை நடத்தலாம்.

Labels:

1 Comments:

At 11:00 AM, Blogger ஆயில்யன் said...

:(((

நேற்று மதியம் எதிர்பாராத விதமாய் ஒரு கார் டிரைவரை சந்திக்க நேர்ந்தது,டக்கென்று தமிழ் ஆள் என்று என்னை அடையாளம் கண்டு கொண்டவர் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மனம் பாரம் சுமந்து நின்றது!

எதையாவது செய்து பலிகளை தடுக்க கூடவா நம் இந்திய தேசத்து அரசால் முடியவில்லை?

தொடர்ந்தால்...!

தமிழின அழிவுக்கு, தமிழகமும் ஒரு விதத்தில் காரணமாய் இருந்தது என்பதை வரலாறு என்றும் சொல்லும் என்பது நிதர்சனம்!

 

Post a Comment

<< Home