வாணி ஜெயராம் - 2 பாடல்கள்
கானக்குயில் வாணிஜெயராம் அவர்கள், வசீகரமானக் குரல் கொண்டவர் என்றாலும், சித்ரா, S. ஜானகி, P.சுசீலா அளவிற்கு அவர் பிரபலமாகாததற்குக் காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் பாடிய பல பாடல்கள் அவரது இனிமையான குரலின் காரணமாகவே ஹிட்டானதோடு மட்டுமல்லாமல், நெஞ்சில் நீங்கா நிற்கும் பாடல்களாகவும் பல ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளது என்னவோ உண்மை.
1979ல் இளையராஜாவின் இன்னிசையில் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெறும் 'என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்...' பாடலும் 'நானே நானா யாரோதானா...' பாடலிலும் பல பரிமாணங்களைக் காட்டியிருப்பார். 'நானே நானா...' பாடலில் நாயகி, melancholic moodல் தன் உள்ளத்து உணர்சிகளை ஒருவித மயக்கத்தோடு வெளிப்படுத்துவதுபோல் அமைந்துள்ள சூழலில், வாணி ஜெயராம் வழக்கமாகத் தன் குரலில் தொனிக்கும் அந்த இயல்பான assertivenessஸையும் மீறி, மிக நேர்த்தியாகவும், கவனமாகவும் இதமாகவும் துயரத்தின் விளிம்பு நிலையைக் கொண்டுவந்திருப்பார். சோகம் தவழும் இந்தப் பாடலின் இசை, சென்னைத் தொலைக்காட்சியின் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சிக்கான ட்யூனாகவும் வெகுகாலம் விளங்கியது என்பது இளையராஜாவிற்குப் பெறுமை சேர்க்கிறது. பாடலைக் கேட்க சொடுக்கவும் இங்கே
லதா என்றாலே MGR-ஓடு பாடிய டூயட் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவர் தனக்கு யதார்த்தமாகவும் நடிக்க வரும் என்பதை வட்டத்துக்குள் சதுரம் (இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்...) மற்றும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படங்களில் நிரூபித்திருக்கிறார். இதுவும் இன்னொரு ஸ்ரீதர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
லதா என்றாலே MGR-ஓடு பாடிய டூயட் காட்சிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவர் தனக்கு யதார்த்தமாகவும் நடிக்க வரும் என்பதை வட்டத்துக்குள் சதுரம் (இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்...) மற்றும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படங்களில் நிரூபித்திருக்கிறார். இதுவும் இன்னொரு ஸ்ரீதர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***
1978ல் இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் வரும் ஒரு பாடற்காட்சி (என்னடி மீனாட்சி...) நான் படித்துக் கொண்டிருந்த பள்ளியில்தான் படமாக்கப் பட்டது. கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா முதலியோர் வந்திருந்தார்கள். யாரும் என் கண்ணில் படவில்லை என்றாலும் நான் வேடிக்கைப் பார்த்த முதல் சினிமா ஷூட்டிங் அதுதான் எனலாம். 'சம்பவ இடத்தில்' திரும்பத் திரும்ப அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டதனால், பள்ளிப் பருவத்தில், அந்தப் பாடலையே அதிகம் விரும்பிக் கேட்க நேர்ந்தது; காலையில் விவித் பாரதியின் 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சியில் கேட்க நேரிட்டால் அன்றைய பொழுது மிக்க மகிழ்ச்சியாயிருக்கும்; பாடலின் முதல் சில வரிகளை எப்போதும் முணுமுணுத்துக் கொண்டிருந்த காலம் அது.
படம் வெளியான பின்னர் எப்படியும் பார்த்தே ஆகவேண்டும் என்ற என் ஆசை என்னமோ நீண்ட நாட்களுக்குப் பின்னர் சன் டிவி மூலமாகத்தான் நிறைவேறியது. இந்தப் படத்தில், இளையாரஜாவின் இசையில் வாலியின் பாடல் ஒன்றினை வாணி ஜெயராம் மிக அழகாகப் பாடியிருப்பார்.
பாடலைக் கேட்க சொடுக்குங்கள் இங்கே
படம் வெளியான பின்னர் எப்படியும் பார்த்தே ஆகவேண்டும் என்ற என் ஆசை என்னமோ நீண்ட நாட்களுக்குப் பின்னர் சன் டிவி மூலமாகத்தான் நிறைவேறியது. இந்தப் படத்தில், இளையாரஜாவின் இசையில் வாலியின் பாடல் ஒன்றினை வாணி ஜெயராம் மிக அழகாகப் பாடியிருப்பார்.
பாடலைக் கேட்க சொடுக்குங்கள் இங்கே
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. ராஜேஷ் கன்னாவும் ஷத்ருகன் சின்ஹாவும் நடித்த படம். தூர்தர்ஷனில் பார்த்த நியாபகம். ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா கதாபாத்திரங்களில் யார் யார் நடித்தார்கள் என்று நினைவிலில்லை.
***
Labels: திரையிசைப் பாடல்கள்
10 Comments:
நல்ல பாடல்கள் நண்பரே
அண்மையில் கே டீவியில் வட்டத்துக்குள் சதுரம் போட்டிருந்தார்கள், அது எஸ்.பி.முத்துராமன் படம்.
வாணி ஜெயராம் தங்க மகன் படத்தில் மேற்கத்தேயப் பாணியிலும் கலக்கியிருப்பார். எனக்கு பிடித்த இன்னொரு பாடல் "யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது".
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் - சூப்பர் பாட்டு. அத பத்தியும் ஒரு பதிவு போடலாமே?
நல்ல பாடல்கள்.
விளக்கத்தோடு பாடல்களையும் தந்ததற்கு நன்றி.
கேட்டு ரசித்தேன்.
நிச்சயமாக சர்வேசன்.. 'இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்' பற்றிய பதிவும் உண்டு.
வந்தனம் சந்திரவதனா வந்தனம்.
கானா பிரபா... அண்மையிலா..மிஸ் பண்ணிட்டேனே! 'யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது'... அருமையான பாடல்... ஆமாம், வாணி ஜெயராம் நிஜமாகவே நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார்.இருந்தும் ஏன் சித்ரா, ஜானகி அளவிற்குப் புகழ் பெறமுடியாமற்போனது..?
நல்ல பதிவு..பாடல்களின் இணைப்புக்களுக்கு நன்றிகள்
பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் நரகம்
சரணம் சரணம்
இப்படித்தான் கடைசி வரிகள் வரும் என்று நினைக்கின்றேன், நன்றி
ஸ்ரீஷிவ்...
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஸ்ரீஷிவ். :)இப்போது திருத்திவிட்டேன்.
ஜானகிக்கு பிறகு எனக்கு ரொம்பவும் பிடித்தமான பாடகி வாணிஜெயராம்.. நீங்க போட்டிருக்கும் lyrics ஐ சும்மா படிக்கவே முடியலை.. ஒரு ராகமா மெட்டு போட்டு தான் படிக்க முடியுது..
good choice of songs.
பி.கு : நான் அப்பப்போ தொடுவானத்திலும் ஏதோ கொஞ்சம் எழுதுவேன். நேரம் இருக்கும் போது வாங்க
//நல்ல பதிவு..பாடல்களின் இணைப்புக்களுக்கு நன்றிகள் //
தூயாவிற்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
//நீங்க போட்டிருக்கும் lyrics ஐ சும்மா படிக்கவே முடியலை.. ஒரு ராகமா மெட்டு போட்டு தான் படிக்க முடியுது..
good choice of songs.//
thank you so much தீபா. உங்க தொடுவானத்தை நானும் அப்பப்போ பார்த்துவருகிறேன். good thoughts. best wishes!
Post a Comment
<< Home