பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, April 17, 2008

தோஹா - தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் - திண்டுக்கல் லியோனி


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தோஹாவில் நாளை (சர்வதாரி வருடம், சித்திரைத் திங்கள், 6ஆம் நாள்) நிகழவிருக்கும் திண்டுக்கல் லியோனி குழுவினரின் நகைச்சுவைப் பட்டிமன்றத்தைக் காணும் பொருட்டு எங்கள் பகுதியிலிருந்து மட்டுமே பல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது எனக்கு லேசான ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆங்காங்கே தீவு போல் தனித்தனியாகவும், சிறு குழுக்களாகவும் இருக்கும் இங்குள்ள இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களை கத்தார் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்யும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் ஒன்று சேர்க்கிறது என்பது மீண்டும் உறுதியாகிறது.


'கத்தார் வலைப்பதிவர்கள் யாரேனும் கண்ணில் படுகிறார்களா என்று பார்ப்போம்' என்றே நானும் நிகழ்ச்சிக்கு செல்வதாக உத்தேசித்துள்ளேன். பார்ப்போம்.

Labels:

3 Comments:

At 12:48 PM, Blogger M.Rishan Shareef said...

இப்பொழுதுதான் உங்கள் செய்தியைப் பார்த்தேன்.நன்றி.
நான் தோஹாவில் இருக்கிறேன்.
நாளைக்கு நானும் வரலாமென உத்தேசித்துள்ளேன்.
டிக்கட் எங்கே கிடைக்கும்? எப்படி வாங்கவேண்டும் எனச் சொன்னால் உபயோகமாயிருக்கும் நண்பரே :)

 
At 7:01 PM, Blogger ரசிகன் said...

கலக்குங்க மாம்ஸ் :) எனக்கு கொஞ்சம் அலுவலக வீட்டுப்பாடம் மீதமிருப்பதால வர இயலாம இருக்கு:)

அதுதான்,எங்கள் சார்புல நீங்க கலந்துக்கிறிங்களே.
விமர்சன பதிவுக்காக காத்திருக்கிறோம்:)

அன்புடன்
ஸ்ரீ

 
At 10:49 AM, Blogger M.Rishan Shareef said...

அப்பாடா..!
நல்லபடியா போய் வந்துட்டேன்.
நிகழ்ச்சி நன்றாக இருந்தது.
கேமரா கொண்டு போக மறந்துவிட்டேன்.

புகைப்படங்களோடு பதிவிட விரும்புகிறேன்.உங்கள் நண்பர்களிடம் புகைப்படங்கள் இருந்தால் அனுப்பமுடியுமா நண்பரே?
msmrishan@gmail.com

 

Post a Comment

<< Home