பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Tuesday, January 02, 2007

இரண்டு சினிமாக்கள்

ZEE Cinemaவில் இன்று காலை 6:00 மணிக்கு சிட்சோர் (Chitchor, அதாவது இதயத் திருடன்) என்ற ஹிந்தி படம் ஓளிபரப்புகிறார்கள் என்ற செய்தியை காலை 8:00 மணியளவில்தான் ஹிண்டு பேப்பரில் கண்டேன். அமோல் பலேகர், ஜரீனா வஹாப் நடித்தது. ரவிந்திர ஜெயினின் தேனினும் இனிய மெல்லிசை படம் மூழுக்க வந்தாலும், பாடல்களில் நமது KJ ஜேசுதாஸின் சுந்தரமான குரல் நம்மை எங்கோ கொண்டு செல்லத்தான் செல்கிறது. சிலருக்கு Chitchor என்ற உடன் KJ ஜேசுதாஸ் நியாபகத்திற்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்தப் படப் பாடல்களுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இன்று கடைசி அரைமணி நேரப் படத்தை மட்டுமே காண நேர்ந்தது. இருந்தாலும், பல வருடங்களுக்கு முன்பு, தூர்தர்ஷனில் பார்த்தது இன்னும் பசுமையான நினைவில் உள்ளது. மிகவும் எளிமையான கதைதான். ஒரு கிராமத்தில் பாலம் அமைப்பதற்காக ஒரு இஞ்ஜினியர் (அமோல் பலேகர்) வருகிறார். அவரைத் தன் மகளுடன் (ஜரீனா வகாப்) பழகவிடுகிறார் மகளின் பெற்றோர். இருவருக்கிடையேயும் காதல் மெல்ல மலர்கிறது. போகப்போகத்தான் தெரிகிறது அமோல் எஞ்ஜினியர் இல்லை, சூப்பர்வைசர்தான் என்று. ஒருகட்டத்தில் இஞ்ஜினியரே (விஜயேந்திர காட்கே) வரும் போது, தன் மகளிற்கு அவரை மணம் முடித்துவைக்க விழைகின்றனர் பெற்றோர். அமோலும், ஜரீனாவும் கடைசியில் சேர்கிறார்களா அல்லது ஜரீனா, விஜயேந்திர காட்கேயைக் கைபிடிக்கிறாரா என்பதுதான் கதையின் க்ளைமாக்ஸ்.
பாசு சேட்டர்ஜியின் அருமையான இயக்கத்தில் இந்தப் படம் 1975ல் வெளிவந்தது. அமோல் பலேகருக்கு இது 5ஆவதோ 6ஆவதோ படம் நினைக்கிறேன். பாசு சாட்டர்ஜி-அமோல் பலேகர் ஜோடி இதற்கு முன்பும் இரண்டு வெற்றிபடங்களைத் தந்தது - அவை, ரஜினிகந்தா (Rajnigandha) மற்றும் சோட்டி சி பாத் (Choti Si Baath). பின்னாட்களில் (1979 வாக்கில்) இதே ஜோடியின் கைகோர்ப்பில் வெளிவந்த பாத்தோம் பாத்தோம் மேயின் (Baaththon Baaththon Mein). அமோல் பலேகரின் மற்றோரு படமும் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் இயக்கத்தில் வந்த நகைச்சுவைப் படமான கோல்மால் (Golmol) என்னைக் கவர்ந்த இன்னோரு படம் (இதையே தமிழில் பாலச்சந்தர் ரஜினியை வைத்து எடுத்தார்).

சிட்சோர்தான் நான் முழுமையாகப் பார்க்க முடியாமற் போனது. மற்றபடி, மதியம் ஏசியாநெட்டில் 1:30க்கு ஒளிபரப்பிய அங்ஙனே ஓரு அவதிக்காலத்து என்ற மலையாளப் படத்தினை நான் காணத் தவறவிடவில்லை. சீனிவாசன், சம்யுக்தா வர்மாவின் இயல்பான நடிப்பில் வெளியான மற்றுமொரு எளிமையான படம். என்ன காரணத்தாலோ படம் கேரளத்தில் வெற்றி பெறாமற் போனது. சாதாரணமான கதை தான்; இன்னும் கேட்டால், ரொம்பவே சிம்பிளான ப்ளாட்தான் - சீனிவாசன் தன்னோடு பள்ளியில் பணிபுரியும் சகடீச்சரான சம்யுக்தா வர்மாவை காதலிக்கிறார்; ஆனால் தன் காதலை அவரிடம் சொல்ல சீனிவாசனுக்குத் துணிச்சல் இல்லை. ஒருகட்டத்தில், ஒரு துரதிருஷ்டமான சூழ்நிலையில், சீனிவாசனும், சம்யுக்தாவும் செய்யாத குற்றத்திற்காக போலிசில் சிக்குகின்றனர். குற்றத்திலிருந்து சம்யுக்தா தப்பிவிடுகிறார்; ஆனால், சீனிவாசன் சிறைக்குச் செல்ல சம்யுக்தா காரணமாகிவிடுகிறார். இரண்டாண்டு சிறைதண்டனை முடிந்து சீனிவாசன் திரும்புகையில், அவருக்கு முகேஷின் நட்பு கிடைக்கிறது. முகேஷே சீனிவாசனிற்குப் புதிய வேலையும் வாங்கிக் கொடுக்கிறார். இதற்கிடையில், முகேஷிற்கும், சம்யுக்தாவிற்கும் திருமணம் நிச்சயமாகிறது. பெண் பார்க்கும் படலத்தில், சம்யுக்தாவும் சீனிவாசனும் இரண்டு வருட இடைவேளைக்கும் பிறகு எதிர்பாராவிதமானதொரு சூழலில் சந்திக்கின்றனர். சம்யுக்தா, சீனிவாசனோடு சேர்கிறாரா? அல்லது முகேஷை மணக்கிறாரா என்பதுதான் க்ளைமாக்ஸ் (Chitchorஇன் க்ளைமாக்ஸ் தந்த அதே எஃபெக்ட்).

சீனிவாசனின் யதார்த்தமான நடிப்பு....அவருக்கே உரித்தான இயல்பான காமெடி, அங்கதம் கலந்த பேச்சு, பெரிய ஹிரோ போன்ற தோற்றம் இல்லை என்றாலும் அவரது பாந்தமான நடிப்புத்திறன் அவரது ரசிகர் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. சீனிவாசனை ஜெயிலுக்குப் போகக்காரணமான சம்யுக்தா வர்மா சொல்லும் சாக்குதான் எடுபடவில்லை. அதனாலேயேதான் படம் தோல்விஅடைந்ததோ?

Labels:

3 Comments:

At 7:26 AM, Blogger செல்லி said...

சினிமாவை நன்றாகவே ஆராய்ச்சி செய்து எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்

 
At 7:50 AM, Blogger SurveySan said...

சாகரனின் நண்பர் என்பதை மற்ற பதிவுகளில் படித்து அறிந்தேன்.

அவர் மரணம் பெரும் துயரை தந்தது.

அவர் குடும்பத்துக்கு நாம் எல்லாம் சேர்ந்து ஏதாவது செய்ய வகை செய்யுங்களேன் சார்.

நன்றி!

 
At 11:11 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

வருகைக்கு நன்றி oosi. நன்றி செல்லி.

 

Post a Comment

<< Home