பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, April 17, 2008

தோஹா - தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் - திண்டுக்கல் லியோனி


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, தோஹாவில் நாளை (சர்வதாரி வருடம், சித்திரைத் திங்கள், 6ஆம் நாள்) நிகழவிருக்கும் திண்டுக்கல் லியோனி குழுவினரின் நகைச்சுவைப் பட்டிமன்றத்தைக் காணும் பொருட்டு எங்கள் பகுதியிலிருந்து மட்டுமே பல சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது எனக்கு லேசான ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆங்காங்கே தீவு போல் தனித்தனியாகவும், சிறு குழுக்களாகவும் இருக்கும் இங்குள்ள இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களை கத்தார் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்யும் இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் ஒன்று சேர்க்கிறது என்பது மீண்டும் உறுதியாகிறது.


'கத்தார் வலைப்பதிவர்கள் யாரேனும் கண்ணில் படுகிறார்களா என்று பார்ப்போம்' என்றே நானும் நிகழ்ச்சிக்கு செல்வதாக உத்தேசித்துள்ளேன். பார்ப்போம்.

Labels:

Thursday, April 10, 2008

கவனத்தை ஈர்த்த ஒரு கவிதை

பாவண்ணன் எழுதிய இந்தக் கவிதையை நான் ஒரு பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பாக 'கணையாழி' இதழிலோ, 'புதிய பார்வை' இதழிலோ வாசித்த நியாபகம். என் மனதில் என்றும் நிலைத்திருக்கும் சில கவிதைகளில் ஒன்றான இந்த 'எளிய பதிலைத் தேடி' என்ற இக்கவிதை, நண்பர் ஒருவரின் மூலமாக மீண்டும் ஒருமுறை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

எளிய பதிலைத் தேடி

நண்பரின் குழந்தைக்கு முதல் பிறந்தநாள்
நேற்று நடந்தது
மாலை விருந்துக்கு
நாங்கள் சென்றிருந்தோம்
எல்லாரையும் போல குழந்தையின் கன்னத்தை நாங்களும் கிள்ளினோம்
கனிவுடன் ஒரு முத்தம் தந்தாள் என்மனைவி
அதன் பிஞ்சு விரல்களோடு
என் மகனின் விரல்களைச் சேர்த்துகுலுக்கச் செய்தோம்
கலைநிகழ்ச்சியில் ஆடத்தயங்கி
நாணத்தால் சிவந்த என் மகனைப் பற்றி
சில வார்த்தைகளைச் சொன்னோம்
கூடம் முழுக்க
முப்பதுநாற்பது குழந்தைகள்
புத்தாடைக்குள்ளே
அழகாக இருந்தன அவர்கள் முகங்கள்


விருந்துக்கப்புறம்
நடந்தபடியே திரும்பத் தொடங்கினோம்
எதுவும் பேசாமல்
என் தோளில் கிடந்தான் மகன்
என்னடா என்னடா என்றேன்
தன் பிறந்தநாளைக் கொண்டாடாதது ஏன் என
மெல்லிய குரலில் கேட்டான்
மடேரெனத் தாக்கியது அக்கேள்வி
ஒரு பெரும்பாய்ச்சலுடன்

மனசிலெழும் பல விடைகளை
அவன் முன் வைக்க முடியவில்லை
எளிய கேள்விக்கு ஈடாகச் சொல்ல
கைவசமில்லை எளிய பதில்.


பாவண்ணன் எழுதிய பல கவிதைகள் திண்ணையில் காணக்கிடைக்கின்றன. நல்ல கவிதையின் ஆதரவாளர்களே.. இதோ இங்கே சொடுக்குங்கள்

Labels: ,