பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, February 14, 2008

காதல் வாழ்க

1. ஒரு ஆணும் பெண்ணும் நெருக்கமாகப் பழகினால், உடனே அது காதலாக இருக்குமென்று எடுத்துக்கொள்ளக்கூடாதாம், ஏனென்று கேட்டால், “அவர்கள் நல்ல நண்பர்களாகவோ, அல்லது அலுவலகத் தோழர்களாகவோ இருக்கலாம் இல்லையா? அவர்கள் தமிழிலக்கியம் பற்றியோ அல்லது ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியோகூட பேசிக்கொண்டிருக்கலாம் இல்லையா? ரொமான்ஸ் பண்ணுகிறார்கள் என்று எப்படி தடாலடியாக முடிவுக்குவரலாம்?" என்கிறார்கள்.

2. பைக்கிலோ, சைக்கிளிலோ, ஒரு பெண்ணையும், ஆணையும் ஒரு சேரப் பார்த்தாலோ அல்லது அலுவலக இடைவேளைகளிலோ, டிஸ்கோத்தேவிலோ, பீஸா ஹட்டிலோ, கையேந்தி பவனிலோ, இன்ன பிற பொது/தனி இடங்களிலோ மணிக்கணக்கில் சிரித்துசிரித்துப் பேசி அரட்டை அடிக்கும் ஜோடிகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் இருவரும் காதல் ஜோடிகள் என்று முடிவுக்கு வந்துவிடக்கூடாதாம்.

சரி, அப்படியானால், எப்போதுதான் காதலர்கள் காதலிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள்? சினிமாவில் வருவதுபோல விதவிதமான உடைகள் அணிந்து பற்பல இடங்களில், செட்டிங்ஸ்போட்டு ஆடிப் பாடினால்தான் அது காதல் என்று ஒத்துக்கொள்வார்களோ?

எது எப்படியோ, இன்றைய நுகர்வுகலாச்சார யுகத்தில், காதலுக்கு உரிய மரியாதை தருவது சினிமா மட்டும்தான்; அது வியாபார நோக்கில் என்றாலும், பல கவிஞர்களை, பல அசிஸ்டெண்ட் டைரக்டர்களை, பல வசனகர்த்தாக்களை காதலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது; காதலர்களுக்காகப் பரிந்து பேச வைக்கிறது. நிஜவாழ்க்கையில் என்னவோ, பெற்றோர்கள் எல்லாக்காலத்தையும் போலவே காதலை அங்கீகரிக்க மறுக்கின்றனர்; காதலை 'சீச்சீ' என்றே பார்க்கின்றனர்.என்னமோ தெய்வகுத்தம் வந்தாற்போல் குதிக்கின்றனர். போதாக்குறைக்கு இந்த சாதி மத பேதங்கள் வேறு. இந்த பேதங்களை உடைத்தெரியவே காதல் திருமணங்கள் பெருக வேண்டும்.

காதலர் தினத்திற்கு அங்கீகாரம் தரும் வியாபார சமூகம் உண்மையில் காதலுக்கும் அங்கீகாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால், ‘ரோஜா வியாபாரிகளாவது வாழட்டும்’ என்று சொல்வதுபோல, ‘வாலண்டைன்ஸ் டேய்’ வாழ்த்து அட்டைகளையும், சிறப்பு பொக்கேக்களையும் விற்கும் ஏழை விற்பனர்களும் முகவர்களுமாவது வாழட்டும் என்ற அளவில் காதலர் தினங்கள் நின்றுவிடும்.

எது எப்படியோ, இந்தக் காதலர் தினத்தில் காதலுக்கும், ஏழை வியாபாரிகளுக்கும் என் வாழ்த்துக்கள்! :)

Labels: ,

8 Comments:

At 8:54 AM, Anonymous Anonymous said...

// வியாபார நோக்கில் என்றாலும், பல கவிஞர்களை, பல அசிஸ்டெண்ட் டைரக்டர்களை, பல வசனகர்த்தாக்களை காதலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது //

producersஐ விட்டுவிட்டீர்களே?

 
At 7:55 PM, Blogger ரசிகன் said...

////சரி, அப்படியானால், எப்போதுதான் காதலர்கள் காதலிக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்வீர்கள்? சினிமாவில் வருவதுபோல விதவிதமான உடைகள் அணிந்து பற்பல இடங்களில், செட்டிங்ஸ்போட்டு ஆடிப் பாடினால்தான் அது காதல் என்று ஒத்துக்கொள்வார்களோ?//
நச்சின்னு கேட்டிங்க மாம்ஸ்..

 
At 7:57 PM, Blogger ரசிகன் said...

//எது எப்படியோ, இன்றைய நுகர்வுகலாச்சார யுகத்தில், காதலுக்கு உரிய மரியாதை தருவது சினிமா மட்டும்தான்;//

இதுவும் உண்மைதான்:)

 
At 7:57 PM, Blogger ரசிகன் said...

//நிஜவாழ்க்கையில் என்னவோ, பெற்றோர்கள் எல்லாக்காலத்தையும் போலவே காதலை அங்கீகரிக்க மறுக்கின்றனர்; காதலை 'சீச்சீ' என்றே பார்க்கின்றனர்.என்னமோ தெய்வகுத்தம் வந்தாற்போல் குதிக்கின்றனர். போதாக்குறைக்கு இந்த சாதி மத பேதங்கள் வேறு. இந்த பேதங்களை உடைத்தெரியவே காதல் திருமணங்கள் பெருக வேண்டும்.
காதலர் தினத்திற்கு அங்கீகாரம் தரும் வியாபார சமூகம் உண்மையில் காதலுக்கும் அங்கீகாரம் கொடுத்தால் நன்றாக இருக்கும்//
இது டாப்பேய்ய்ய்ய்.......இதுல ஒரு வேடிக்கை என்னன்னா.. காதலித்து திருமணம் செஞ்சுக்கிட்ட பெற்றோர்களே.. தாங்கள் நலமாக வாழ்ந்த போதும்,பிள்ளைகளின் காதலை விரும்பாததுதான்:)

 
At 10:32 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

வருகைக்கு நன்றி லோகேஷ்.

//producersஐ விட்டுவிட்டீர்களே?// சினிமாவில் காதலை வியாபரமயமாக்கியதில் முதல் பங்கு தயாரிப்பாளர்களையே சாரும். தயாரிப்பாளர்கள் என்று சொல்லும்போது அதில் முதலீட்டாளர்களையும், விநியோகிஸ்தர்களையும் கூட சேர்த்துக்கொள்ளுங்கள். இன்று காதலர் தினம் என்கிற பெயரில் நடைபெறும் கூத்தும் உலகமயமாக்கல்/வியாபாரமயமாக்கலின் விளைவாகத்தான் இந்தியாவில் பிரபலமானதேயன்றி வேறு காரணங்கள் ஏதும் இல்லை. நீங்கள் வேண்டுமானால், உங்கள் வீட்டிலுள்ள மூத்தவர்களைக் கேட்டுப் பாருங்களேன் 'valentine's day' பற்றி நாம் அறிய வந்ததெல்லாம் நரசிம்மராவ்-மன்மோகன் சிங் 1990ளில் துவக்கிவைத்த புதிய பொருளாதாரக்கொள்கைளின் அடிப்படையிலான செயல்திட்டங்களுக்குப் பின்னர்தானே?

 
At 11:09 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

ரசிகன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


//இதுல ஒரு வேடிக்கை என்னன்னா.. காதலித்து திருமணம் செஞ்சுக்கிட்ட பெற்றோர்களே.. தாங்கள் நலமாக வாழ்ந்த போதும்,பிள்ளைகளின் காதலை விரும்பாததுதான்:)//

சரியாகச் சொன்னீர்கள். ஆனால், இதில் வேடிக்கை இல்லை, வேதனையே உள்ளது. காரணம், தனக்கு வரும்போது அது காதல், மற்றவருக்கு (தன் குழந்தைகள் உட்பட) வரும்போது அது infatuation.

மகன் காதலிக்கிறான் என்று தெரிந்தால் 'என் சொத்தில் உனக்கு பங்கு கிடையாது' என்று கர்ஜிக்கிறார், குதிக்கிறார் தந்தை. மகள் காதலிக்கிறாள் என்று தெரியவந்தாலோ, 'கொஞ்சம் கூட அவளுக்குப் பொருந்தாத மாப்பிள்ளையை' அவள் அனுமதியை வற்புறித்திப்பெற்று ('நீ மட்டும் சம்மதிக்கலைன்னா, நான் தற்கொலை பண்ணிக்குவேன்') தடாலடியாக அவளது கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்.

 
At 11:41 PM, Blogger கானகம் said...

நீங்களுமா இந்த காதலர்தினக் கூத்துல கலந்துகிட்டீங்க..?? பனம் இருக்குரவண்ட்ட பிடுங்குறதுக்குன்னே இந்த மாதிரி "தினம்" எல்லாம் அறிமுகப்படுத்தப்படுது.. என்னமோ 10 வருஷத்துக்கு முன்ன காதலர்களே இல்லாம்் இருந்த மாதிரியும் இப்பதான் இந்த "தினம்" வந்த பின்னாடிதான் எல்லோரும் காதலிக்கிற மாதிரியும் மீடியா பன்ற அழும்பு தாங்க முடியலப்பா....

 
At 7:43 PM, Blogger Karthik said...

konjam late ah eluthuren..But good post...

 

Post a Comment

<< Home