பழமுதிர்சோலை நமக்காகத்தான்
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான (6வது படைவீடு) பழமுதிர்சோலைக்கு சென்று முருகக் கடவுளைத் தரிசிக்க வேண்டும் வேண்டும் என்று கடந்த பல வருடங்களாக நான் நினைத்தது இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் நிறைவேறியது. மற்ற ஐந்து படைவீடு கோவில்களைப் போல இந்தக் கோவில் அத்துணை பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. தவிர, இங்குள்ள இறைவனுக்கு பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தும் வழக்கம் இல்லையோ என்னவோ.. ஒரு மொட்டைத்தலை கூட என் கண்ணில் படவில்லை. ஐந்து படைவீடுகளிலும் முடிகாணிக்கை செலுத்திய எனக்கு, ஆறாவதுபடை வீடான பழமுதிர்சோலையிலும் முடிகாணிக்கை செலுத்தவேண்டும் என்ற எனது வேண்டுதல் இன்னும் நிறைவேறாமலேயே உள்ளது.
மலை மீது அமைந்திருந்த இந்த ஆலயத்திலிருந்து இன்னும் சற்று மேலே மேலே நடந்தால், நூபுர கங்கை என்ற சிற்றறுவி விழும் இடம் இருப்பதைக் காணலாம்ம். இந்த அருவியில் தண்ணீர் குறைவாகவே வரும் என்பதால் அருவி நீரைத் தேக்கிவைத்து, குளிப்பதற்கு ஏதுவாக குழாய் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நான் இங்கு வந்திருந்த போது இந்த குழாய் வசதி இருந்ததாக நினைவில்லை. அதேசமயம், மலையில் ஏறிச்சேலும் பாதை நெடுகிலும், கோவிலிலும் மற்றும் நூபுர கங்கை மண்டபத்திலும் ஏராளமாகக் காணப்படும் குரங்குகள்; அவை படுத்தும்பாடு இருக்கே... மறக்கமுடியாதவை. இந்த குரங்குகளுக்கு பயந்தபடியே நடந்த என் ஏழுவயது மகளை சமாதானப்படுத்தவே போதும்போதும் என்றாகிவிட்டது. 'சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டு, மரத்திலிருந்து பழங்களை உதிரச்செய்து அவ்வைப் பிராட்டியாருக்கு பாலமுருகன் பாடம் நடத்திய திருத்தலம் இதுதான் ('பழம் உதிர் சோலை' - பழமுதிர்சோலை).
குரங்குகளுக்கு ரொம்பவே பயந்தபடியே நடந்த என் மகளை 'ஏண்டி ரொம்ப ஓவராப் பண்ற' என்று செல்லமாக அதட்டிக்கொண்டே வந்த எங்கள் முன்பாக திடுக்கென்ன குதித்த குரங்கொன்று எங்களிடமிருந்து பழத்தை சுட்டு எங்களுக்குப் பாடம் புகட்டியது இந்தப் பயணத்தின் மறக்கமுடியாத விஷயம்.
பழமுதிர்சோலை ஆலயம்
ஆலய நுழைவாயில் சிலம்பாறு/நூபுரகங்கைக்கு செல்லும் பாதை

Labels: ஆலயம்
2 Comments:
நல்ல வேளை, குரங்கு உங்கள் கேமராவைக் கேட்க வில்லை!
படங்கள் அருமை!
புகைப்படங்கள் அருமை. 'சுட்டபழம் வேண்டுமா' ஔவையார்-முருகன் நிகழ்ந்த ஸ்தலம் இதுதானா, உங்கள் பதிவின் மூலம்தான் அறிந்துகொண்டேன். பதிவிற்கு நன்றி.
Post a Comment
<< Home