பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Sunday, January 06, 2008

இந்திய வெற்றி - ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட்






முன்குறிப்பு: சில மணித்துளிகளுக்கு முன்பு நிறைவடைந்த சிட்னி டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை, ஆட்டத்தின் போக்கினை ஆட்டக்காரர்களைவிட நடுவர்கள் (Umpires) அதிகமாக முடிவு செய்தார்களென்றே எனக்குப்படுகிறது. அந்தவகையில், அம்பையர்கள் ஸ்டீவ் பக்னரும், மார்க் பென்ஸனையும் சேர்த்து ஆஸி அணிக்குப் பதிமூன்று ஆட்ட்டக்காரர்கள் எனலாம்.

ஆண்ட்ரூ சைமண்ட்ஸிற்கு மூன்று வாழ்வுகள் முதல் இன்னிங்க்ஸில் (இதில் சைமண்ட்ஸே ஒப்புக்கொள்கிறார் 30 ரன்னில் அவர் அவுட் என்று); இரண்டாவதில், மைக்கேல் ஹஸ்ஸி; இந்தியா மட்டையுடன் களமிறங்கியபோதோ, அம்பையரிங் இன்னும் மோசம். வாசிம் ஜாஃபர் முதல் இன்னிங்ஸில் அவுட் கொடுக்கப்பட்டது ஒரு No Ballலிலாம்! . இரண்டாவது இன்னிங்ஸில், ராஹுல் திராவிட்டின் மட்டைக்கும் பந்துக்கும் ஒரு மைல் இடைவெளி இருந்தபோது caught behind out கொடுத்தார் ஸ்டீவ் பக்னர் என்றால், மார்க் பென்ஸனும் தன் பங்கிற்கு கங்கூலியை போட்டுத் தள்ளினார், என்னமோ என்கவுண்டரில் போடுவதுபோல. டிவி ரிப்ளேக்கள் தொடர்ந்து சொல்கிறது மைக்கேல் க்ளார்க் கேட்சை ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்று. எதுவாக இருந்தாலும், இந்தப் பதிவின் நோக்கம் அம்பையரிங்கைக் குறை கூறுவதன்று. அம்பயரிங் மட்டும் நடுநிலைமைத் தன்மையோடு இருந்திருந்தால் இந்தப் போட்டியும் கீழ்காணும் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவ்விற்கெதிரான இந்திய வெற்றிகள்


வான்கடே ஸ்டேடியம், மும்பை - நவம்பர் 2004 (click for scores)


முதல் நாளே, முதல் இன்னிங்ஸில்104 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி, கற்பனை செய்து கூடப் பார்த்திருக்காது இந்தப் போட்டியில் வெல்லும் என்று. இரு அணிகளும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்த பந்தையத்தில் இந்திய வெற்றியைச் சாத்தியப்படுத்தியவர் ஹர்பஜன் சிங்தான் (5/29); 93 ரன்களுக்கு ஆஸியை சுருட்டி 13 ரன்களில் இந்தியா வென்றது. கும்ளே, ஹர்பஜன், முரளி கார்த்திக் என மூன்று சுழற்பந்துவீச்சாளருடன் களமிறங்கிய இந்திய அணி, ஆஸியியை முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்னுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. முதல் இன்னிங்ஸில் திராவிட் ஆட்டமிழக்காமல் 31 ரன்களிலும், இரண்டாவதில் லட்சுமண் (69) டெண்டுல்கர் (55) ஆகியோரின் ரன் சேகரிப்பும் பயனுள்ள பங்களிப்புகள்.

அடிலைட் ஓவல் - டிசம்பர் 2003 (click for scores)

ஆஸியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 556; அதில், ரிக்கி பாண்டிங் 242; எனினும் அசராத இந்தியா திராவிட் (233) லட்சுமண் (148) துணையில் 523 ரன்கள் குவித்தது. அப்புறம் அஜித் அகர்கர் வேற... என்னிக்கும் இல்லாத அசத்தலான பந்துவீச்சா.. .கேட்கவே வேண்டாம்...6 for 41!


சேப்பாக்கம், சென்னை - மார்ச்சு 2001 (click for scores)

மேத்யு ஹேடன் 203
டெண்டுல்க்கர் 126
ஹர்பஜன் சிங்கின் அபாரமான பந்து வீச்சு (7/133 மற்றும் 8/84)
முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் எடுத்தபோதும் இறுதி வரை பரபரப்பாகப் போய், இரண்டு விக்கெட்டில் இந்தியா வெற்றி.

ஈடன் காடன்ஸ், கொல்கத்தா - மார்ச்சு 2001 (click for scores)

ஆஸியின் 445க்கு இந்தியா முதல் இன்னின்ஸில் 171 ரன்களே எடுக்கமுடிந்தது. Follow-onல் மீண்டும் களமிறங்கிய இந்திய அணி குவித்ததோ 600+ ரன்கள்; லட்சுமண் (281) - திராவிட் (181) ஜோடியின் அபாரமான பார்ட்னர்ஷிப்பில் 381 குவிந்தது ரன்.

சேப்பாக்கம், சென்னை - மார்சு 1998 (click for scores)
சச்சின் டெண்டுல்கரின் 155...!

ஃபெரோஸ் ஷா கோட்லா, புதுடெல்லி - அக்டோபர் 1996 (click for scores)

நயன் மோங்கியாவின் 152 ரன்கள்; அவர் வாழ்கையிலேயே மறக்க முடியாத இன்னிங்க்ஸ்... பலருக்கோ, நம்பமுடியாத ஒரு உண்மை!

ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா - மார்ச்சு 1998 (click for scores)

ஜவாகல் ஸ்ரீநாத் ஏற்படுத்திக்கொடுத்த அபாரமான துவக்கம், ஆரம்பம் முதலே இந்தியாவிற்கு ஏறுமுகம்தான்; நமது மட்டைக்காரர்கள் களமிறங்கியபோதோ, ரன்கள் மளமள வென்று வந்து கொண்டே இருந்தது; 663 ரன்கள் ஸ்கோரில், 5 ஆட்டக்காரர்கள் அரைசதம் அடிக்க அசாருதீன் ஒருவரால் மட்டுமே சதம் அடிக்க முடிந்தது.

இந்தப் போட்டிகள் எல்லாவற்றிலுமே இரண்டு ஆட்டக்காரர்கள் என் கவனத்திற்கு வருகிறார்கள் - லட்சுமண் மற்றும கும்ப்ளே; பெரும்பான்மையான போட்டிகளில் இந்திய வெற்றிக்கு அவர்கள் நல்ல வகையில் பங்களித்துள்ளதாக அறிந்துகொள்கிறேன்.

சேப்பாக்கம், சென்னை - செப்டம்பர் 1986 (click for scores)

இந்த பட்டியலில் இதை நான் சேர்த்ததற்குக் காரணம், ஒரு சாதாரண draw ஆகக்கூடிய போட்டியை ஒரு challengeஆக எடுத்துக்கொண்டு விளையாடிய இந்திய அணியின் spirited chaseஐ என்னால் மறக்கவேமுடியாது. உடல் நலக் குறைவையும் பொருட்படுத்தாது இயன்ற வரை கிரிஸில் தனது தலைவன் ஆலன் பார்டருடன் விளையாடி 200க்கும் மேல் ரன்களைக் குவித்த டீன் ஜோன்ஸ் அனைவரது மனதையும் தன் விடாமுயற்சியல் கொள்ளை கொண்டார் என்றால் அது மிகையாகாது. அதே விடாமுயற்சி இரு அணிகளில் ஆட்டத்திலும் கடைசி நாள் இறுதிகட்ட ஆட்டம் வரை தொடர்ந்தது. நான்காவது இன்னிங்ஸில் 340+ ஓட்டங்களை chase செய்ய முடிவு செய்ததே பெரிய விஷயம்.


மெல்பர்ன் - பிப்ரவரி 1981 (click for scores)

முதல் இன்னிங்க்ஸில் சதமடித்த குண்டப்பா ராவ் விஷ்வநாத், ஆஸ்திரேலிய வீரர்களை அவ்வளவு எளிதில் ரன் எடுக்க விடமுடியாதபடி கச்சிதமாகப் பந்துவீசிய திலீப் தோஷி, இந்தியாவை மீண்டும் ஆட்டத்திற்குக் கொண்டுவந்த இரண்டாவது இன்னிங்க்ஸின் சுனில் கவாஸ்கர்-சேத்தன் சௌஹான் ஜோடியின் 165 ரன் அபாரமான பார்ட்னர்ஷிப் - இவை எல்லாவற்றையும் விட கடைசிநாளில், painkillerகளை உட்கொண்டு ஆடுகளத்தில் இறங்கி நம் மானத்ததக் காத்த கபில் தேவின் magic spellல்லால் வந்த இந்திய வெற்றி எல்லாமே மறக்க முடியாத வெற்றியாக்கிவிட்டது. எனினும், இந்த டெஸ்டின் மிகவும் மறக்க முடியாத வரலாற்றுச் சம்பவம் என்னவென்றால், அணித்தலைவர் சுனில் கவாஸ்கர் செய்த walkout சம்பவம்தான். ஒரு கோபத்தில்/ஆத்திரத்தில், ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் போட்டியை forfeit செய்வதாக அவர் அறிவித்தபோது, அணியின் மேலாளரே களமிறங்கிவந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். சுனில் கவாஸ்கர் இந்த சம்பவத்திற்கு பின்னாட்களில் அதிக வருத்தம் தெரிவித்தார். The following is quoted from his Idols... "That (the walkout) was the most regrettable incidents of my life. Whatever may be the provocation and whatever the reason, there was no justification for my action and I realize now that I did not behave the way a captain and sportsman should..." இப்படி பகிரங்கமாக தனது தவறை ஒப்புக்கொண்ட சுனில் கவாஸ்கர் அவர்களை என் உள்ளம் கவர்ந்த ஆட்டக்காரர்களில் ஒருவர் என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமைபடுகிறேன். மேலும் சில இந்திய வெற்றிகள்

க்ரீன் பார்க், கான்பூர் - அக்டோபர் 1979

வான்கடே, மும்பை - அக்டோபர் 1979

சிட்னி - ஜனவரி, 1978

மெல்பர்ன் - ஜனவரி 1978

புதுடெல்லி - டிசம்பர் 1969

ப்ரபோர்ன் ஸ்டேடியம், மும்பை - அக்டோபர் 1964

க்ரீன் பார்க், கான்பூர் - டிசம்பர் 1959


***

பின்குறிப்பு: இந்தப் பதிவைப்போடத் துவங்கும் சமயத்தில் என்னவோ, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத்தான் இருந்தது; அது நேற்றைய கதை! இன்று காலையோ, 'Publish Post' பொத்தானை அமுக்க ஆயத்தமான தருவாயில்கூட, இந்தத் டெஸ்ட் டிராவை நோக்கி நகர்வதாகவே நினைத்தேன்; எனினும், இறுதி வரை காத்திருக்க முடிவு செய்துவிட்டுப் பார்த்தால்... சே-ன்னு ஆயிடுச்சு! யாரிந்த மைக்கேல் க்ளார்க்...? இந்த மேட்சில் உருப்படியாக ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை (முதல் இன்னிங்ஸில் 1, இரண்டாவதில் டக்!)... ஆனால், penultimate overல் இந்தியாவின் கதையையே முடித்துவிட்டாரே! ஒரு ஓவரில் எல்லாம் கனவாகப் போய்விட்டது. சரி, ஒரு ஆறுதலாகப் போகட்டும் என்றே, இதை நான் பதித்துத் தொலைக்கிறேன். சொல்லமறந்துட்டேனெ... இது என் 50ஆவது பதிவு!

Labels:

2 Comments:

At 2:52 PM, Anonymous Anonymous said...

it was a very sad end. i can't tolerate it, all my blood is boiling now. its all planned against india it seems.

angry anony.

 
At 8:04 AM, Blogger Ponnarasi Kothandaraman said...

:) Cricket naanum romba thooram :D
Adutha postku varen!

 

Post a Comment

<< Home