பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, December 27, 2007

தமிழில் குறும்படங்கள் (Short films)

இணையத்தில் கண்ட சில குறும்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். எனது கணினியில் ஆடியோவசதி இல்லாததால், ஆங்கில சப்-டைட்டில் உதவியுடன் சில படங்களைப் பார்க்க நேர்ந்தது. சில நிமிடங்களே திரையில் ஓடி, பார்வையாளரை/விமர்சகரை பல வரிகள் பேசவைக்கிறதா, அதுவே படத்தின் வெற்றி. அவற்றில் சில:

The Way (இயக்கம்: ராம்) என்றொரு அற்புதப் படம். தவளை (The Frog) என்று கூட தலைப்புக் கொடுத்திருக்கலாம். ஒரு தவளை ஜீவித்திருக்கும் சொற்ப காலத்தில் சந்திக்க நேரும் ஆபத்துகள்தான் எத்தனை... ஆபத்துகள் அற்ற பாதை என்றுதான் ஏதாவது இருக்கிறதா - இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன்.
The Way

மனதில் பதிந்த இன்னுமொரு படம் Memories (நினைவுகள்). எதிர்பார்த்தது போலவே போகும் கதையாக இருந்தாலும், படத்தின் சிறப்பம்சமாக நான் கருதுவது மிகச்சில கணங்களே வந்து போனாலும் நினைவில் நிற்கும் முகங்களான அஷோக்-நர்மதா ஜோடியையும் D. பிரவிண் குமாரின் ஒளிப்பதிவையும். Memoriesஐ எழுது இயக்கி தயாரித்திருப்பவர் ராகேஷ் ஸ்ரீதர்.
Memories

மேலும் சில படங்கள்:

ரசிகன்
தயாரிப்பு: L.V. பிரசாத் மற்றும் TV அகாதமி
இயக்கம்: சுதர்சன்

பாவி
R. பாரத்சிம்ஹன்

2025
இயக்கம் - ஹேமந்த் குமார்

குறும்படங்கள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு சென்னை கே.கே. நகரிலுள்ள திரு. பாலச்சந்தர் அவர்களை அணுகலாம் (கைப்பேசி எண்: 98842 84348). அவர் கைப்பேசிக்கு அடித்த போது, ரஜினியின் பாடலான ‘பொதுவாக எம்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ ஒலித்தது... உண்மையிலேயே, மனிதருக்குத் தங்கமனசுதான்.
DisABILITY என்றதொரு யதார்தமான படத்தொகுப்பை அவர்பங்குக்கு upload செய்துள்ளார். ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய தொகுப்பு அது.

Link:

குறும்பட விழா பற்றி இணையத்தில் வந்த செய்தி

Labels:

3 Comments:

At 6:07 AM, Blogger Ponnarasi Kothandaraman said...

Good information :) Padangalai Paarpom!

 
At 7:30 AM, Blogger Venky said...

Thanks so much for this post. I thoroughly enjoyed each short film. As you say, putting forth a theme in such a short duration is a big challenge and many have succeeded doing that. The intricacies of film making are evident at various points in the films.

Do you have plans to direct short films?

 
At 11:32 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

Ponnarasi, thank you for visiting my blog.

Venky,

thanks for your comments.

//Do you have plans to direct short films?//

I had.

 

Post a Comment

<< Home