கத்தார் (Qatar) விடுமுறை நாட்களில்
பிழைப்புத்தேடி இங்கு வந்த பலருக்கு (குறிப்பாக கட்டுமானத் துறையில் பணிபுரிபவர்களுக்கு) விடுமுறை தினம் என்பது ஒரு வரப்பிரசாதம்; அன்று வேலைக்குப் போகவேண்டாம் என்பதற்காக அல்ல, அந்த விடுமுறை தினத்தில் பணிசெய்தால் Over Timeஆகக் கருதப்பட்டு கூடுதல் காசு பார்க்க முடியும் என்பதற்காக; இல்லையென்றால், வருடாந்திர விடுப்பு (annual vacation)சமயத்தில் ஒரு தினம் கூடுதலாகக் கிடைக்க வழிசெய்யும் என்பதற்காக. உடனே, ஹோலிடேய் என்பது ஜாலிடேய்தான் என்று கருதவேண்டாம். அந்நிய தேசத்தில் குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து வாழுதல் என்பது ஈடுசெய்யமுடியாத ஒரு இழப்பு. அதுவும் நல்ல கம்பெனியோ, நல்ல பணிசெயும் சூழலோ அமையாவிட்டால் மன அழுத்தம்தான் அதிகரிக்கும். நண்பர்கள், தங்குமிடம், போக்குவரத்து என்று எல்லாம் நல்லபடியாக அமைந்தால் கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
வருடத்திற்கு இருமுறை (ரம்ஜான் மற்றும் பக்ரீத்) வரும் தொடர்விடுமுறைகள், சிலருக்கு அண்டைநாடுகளான அமீரகம் (UAE), பெஹ்ரெயின், ஒமான் என்று சென்றுவர உதவுகிறது. சிலருக்கு கத்தாரிலேயே இருக்கும் தங்கள் சொந்தபந்தங்களை, நாட்டு நண்பர்களை, ஊர்க்காரர்களை சந்திக்க ஒரு அருமையான வாய்ப்பாக அமைகிறது. இந்த டிசம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில் வரும் விடுமுறைகள் உண்மையிலேயெ பாலைவனச் சோலைதான் - டிசம்பர் 18 (கத்தாரில் தேசிய தினம்) 19 முதல் 22 வரை (5 தினங்கள் பக்ரீத் பண்டிகைக்காக) 25 (கிருஸ்மஸ்), 28 (வார விடுமுறை - வெள்ளிக்கிழமை) 31 (நியூ யியர் ஈவ்).......
இந்த விடுமுறையில் சொல்லிக்கொள்ளும்படி செய்த காரியம் - நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து ஒரு 175 கிமி தொலைவிலுள்ள உம் சைத் (Umsaied) என்ற இடத்திற்குச் சென்று வந்ததுதான். மற்றவை புகைப்படங்களில் காண்க.
5 Comments:
படங்கள் நன்றாக இருக்கு.
நீங்களாவது 175 கி.மீ போக முடியுது,இங்கு 65 கி.மீ க்கு மேல் போனால் கரையே வந்துவிடும்.:-))
நன்றி வடுவூர் குமார்.
//இங்கு 65 கி.மீ க்கு மேல் போனால் கரையே வந்துவிடும்.:-))
//
தற்சமயம் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? கத்தாரிலா?
அப்படியே இந்த பதிவையும் பாத்துருங்க...
http://jeyakumar-srinivasan.blogspot.com/2007_12_01_archive.html
ஜெயக்குமார்
//அப்படியே இந்த பதிவையும் பாத்துருங்க...//
பார்த்தேன். ரசித்தேன். பதித்தேன்.
அங்கே பதித்துவிட்ட அதை கையோடுதான் இங்கேயும் பதிக்கிறேன் என் நன்றிகளை.
nice post. Liked the way you narrated it. Enjoyed the photos. Nice little holiday from the corching sun I guess.
Post a Comment
<< Home