பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Sunday, February 17, 2008

சென்னையில் பிலிப்பினோ திரைப்பட விழா filipino film festival @ chennai

சென்னையில் தற்போது ஏதாவது திரைப்படவிழா நடைபெறுகிறதா என்று மேய்ந்தபோது, என் கண்ணில்பட்ட செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

புதுடில்லியின் பிலிப்பினோ தூதரகம் மற்றும் சென்னைத் திரைப்பட கழகம் ஆகியவற்றுடன் இணைந்து சென்னையில் உள்ள Indo Cine Appreciation Foundation (ICAF) அமைப்பு நடத்தும் இந்த பிலிப்பினோ திரைப்பட விழா நாளை பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 27 வரை South Indian Film Chamber திரையரங்கில் (606, அண்ணா சாலை) நடைபெறவுள்ளது.

இந்தத் திரைப்படவிழாவில் காண்பிக்கப்படும் பிலிப்பினோ திரைப்படங்கள்:
Inang Yaya (18-பிப்ரவரி மாலை 6:30)
Dekada (19-பிப்ரவரி மாலை 6:30)
Muro Ami (20-பிப்ரவரி மாலை 6:30))
Bata Bata Paano Ka Ginawa (21-பிப்ரவரி மாலை 6:30)
Jose Rizal (22-பிப்ரவரி மாலை 6:30)
Magnifico (23-பிப்ரவரி மாலை 6:30)
Mano Po (24-பிப்ரவரி மாலை 6:30)
Panaghoy Sa Sub (25-பிப்ரவரி மாலை 6:30)
Till I Met (26-பிப்ரவரி மாலை 6:30)
Kasal, Kasali, Kasalo (26-பிப்ரவரி மாலை 7:45)
Aishite Imasu (27-பிப்ரவரி மாலை 6:15)
Matakot Ka Sa Karma (27-பிப்ரவரி மாலை 7:45)


ICAF அமைப்பின் செயலர் திரு. தங்கராஜ் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்த ICAF அமைப்பில் உறுப்பினராக ஒரு போட்டோவும் ஆண்டொன்றுக்கு ரு।550 பணமும் கொடுத்தால் போதும் என்றும் ஒவ்வொறு மாதமும் குறைந்தபட்சம் ஒரு பத்து வெளிநாட்டு படங்களைக் காணலாம் என்றும் சொன்னார். கடந்த மாதங்களில், பின்லாந்து, தென்னாப்பிரிக்கா நாட்டு புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட்டதாகச் சொன்னார்.

ஆர்வலர்கள், இது குறித்த மேல்விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள்: 044 249 58691 மற்றும் 98401 51956। மின்னஞ்சல்: thangaraj_icaf@hotmail.com

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home