கண்ணதாசன் காரைக்குடி பேரசைசொல்லி ஊத்திக்குடி
படம்: அஞ்சாதே
ஒலிப்பதிவு: மஹேஷ் முத்துஸ்வாமி
கலை: அமரன்
இயக்கம்: மிஸ்கின்
நடனம்: பாபி தினா
பாடல்: கபிலன்
இசை: சுந்தர் C. பாபு
***
2008ன் முதல் ஹிட் பாடல்?!
கண்ணதாசன் காரைக்குடி
பேரைச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானைப்போல் பாடப்போறேன்டா
கண்ணாடிக் கோப்பையில கண்ணமூடி நீச்சலடி
ஊருகாயத் தொட்டுக்கிட்டாத் ஓடிப்போகும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம்தான்
(கண்ணதாசன் காரைக்குடி)
பொண்டாட்டி புள்ளைங்க தொல்லையில்லா இடம்தானே
இந்த இடம் இல்லையின்னா சாமிமடம்தானே
மேஸ்திரி கடல்ல கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ணை நினைச்சு இடிக்கிறாரே
இயக்குனர் யாரு அங்க பொலம்புறாரு
நூறு மில்லியை அடிச்சா போதையில்லையே
நூறைத் தாண்டுனா நடக்க பாதையில்லையே
(கண்ணதாசன் காரைக்குடி)
அண்ணனும் தம்பியும்
எல்லாரும் இங்கே வந்தா டப்பாங்குத்துதானே
ஓவரா ஆச்சுன்னா வெட்டுக்குத்துதானே
எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்க்ளுக்கு ஜாதிமதம் ரெண்டுமில்ல
ரோட்டுக்கடையில மனுஷன் ஜாலியைப்பாரு
சேட்டுக்கடையில மனைவி தாலியைப் பாரு
(கண்ணதாசன் காரைக்குடி)
கண்ணாடிக் கோப்பையில கண்ணமூடி நீச்சலடி
ஊருகாயத் தொட்டுக்கிட்டாத் தொலையும் காய்ச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம்தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷலிசம்தான்
(கண்ணதாசன் காரைக்குடி)
Labels: திரையிசை பாடல்
2 Comments:
add this also...மிஸ்கின் அவர்களே பாடிய பாட்டு இது.
இதுவரை நான் கேக்காத பாட்டு.. எதுகை மோனையெல்லாம் பின்னுது..:)
ஒலி இசைப்பானையும் இணைத்திருக்கலாமே மாம்ஸ்.,.:)
Post a Comment
<< Home