பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Saturday, January 26, 2008

வந்தே மாதரம் என்போம்! குடியரசுதின வாழ்த்துக்கள்!




பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய இந்த வந்தே மாதரம் (வங்காள மொழியில்):

வந்தே மாதரம்!
சுஜலாம் சுபலாம்
மலயஜ சீதலாம்
ஷஸ்யஷியாமளாம்
மாதரம்
வந்தே மாதரம்

ஷுப்ரஜ்யோத்ஸன
புலகிதயாமினிம்
புல்லகுஸுமித த்ருமதல
ஷோபினிம்
சுஹாசினிம் சுமதுர
பாஷினிம்
சுகதாம் வரதாம்
மாதரம்
வந்தே மாதரம்

பாடலை மகாகவி சுப்பிரமணிய பாரதியார் முதலில் இவ்வாறு மொழிபெயர்த்தார்:

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம், வரம்பல நல்குவை!


பின்னர், பாடலுக்கு மேலும் சில சந்தங்கள் சேர்த்து, இரண்டாவது முறையாக மொழிபெயர்த்தார்:

நளிர்மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும் வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும் தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களும் புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும் வாய்ந்தனை இன்பமும் வரங்களும் நல்குவை. (வந்தே)

கப்பலோட்டிய தமிழன் படத்தில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்போம் பாடலைக்கேட்க இங்கே சொடுக்குங்கள்

வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?




Labels:

2 Comments:

At 11:51 PM, Blogger Vijay Vaidyanathan said...

thangalukkum en iniya kudiyarasu thina vaazhthukal :)

 
At 11:47 AM, Blogger ரசிகன் said...

குடியரசுதின வாழ்த்துக்களுக்கு ,கொஞ்சம் லேட்டானாலும், என்றும் எப்போதும் வந்தே மாதரம் சொல்ல கடமைப் பட்டுள்ளேன்..
வாழ்த்துக்கள் மாம்ஸ்...
வந்தே மாதிரம்(ஏ.ஆர்.ஆர் நாட்டுப் பற்றுடன் இசை அமைத்த ) பாடலின் ஒலி வடிவத்தையும் சுட்டியாக கொடுத்திருக்கலாமே..

இதற்க்கு பாரதியாரின் தமிழ் மொழிபெயற்ப்பு மிக அருமை...
தொகுத்து தந்ததிற்க்கு மிக்க நன்றிகள்...

 

Post a Comment

<< Home