செம்மீன் - மானஸ மைனே வரு...
செம்மீன் படப் பாடல் ‘கடலினக்கரப் போணோரே..’ பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் கூட ‘ஹிட்’ ஆன ஒரு பிறமொழிப்பாடல். செம்மீன் படத்தின் பாடல்களை நான் பல சமயங்களிலும் கேட்க நேர்ந்திருந்தாலும், படத்தைக் காணும் வாய்ப்பு சமீபத்தில்தான் கிடைத்தது.
தகழி சிவசங்கரன் பிள்ளை என்னும் மகத்தான இலக்கிய புருஷன் படைத்த நாவல்தான் செம்மீன் படத்தின் கதை, திரைக்கதை, ஜீவன் எல்லாம். தகழி, செம்மீன் நாவலை இருவதே நாட்களில் எழுதிமுடித்தாராம். பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.
மலையாள சினிமாவிற்கு மணிமகுடம் அளித்த இந்த செம்மீன் பட DVDயை திரும்பத் திரும்பப் போட்டுப்பார்த்தேன்... ஏன், படம் load ஆகவில்லையா, கதை புரியவில்லையா என்று கேட்காதீர்கள். ஓரளவு புரிந்த மலையாளமும், ஆங்கில subtitlesம் விளக்காத சில உண்மைகளை அறிந்து தெளிவு பெறவேண்டி, செம்மீன் படத்தை நினைவுகூறும் மலையாள அன்பர்கள் சிலரிடமும் கேட்டுப்பார்த்தேன்... என் மனதை வாட்டியெடுத்த அந்தக் கேள்வி இதுதான். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி முடிவில் ஒரு மீனைக் காண்பிக்கிறார்களே.. எந்த வகையில் கதை, ‘செம்மீன்’ என்ற டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணுகிறது என்ற எனது கேள்வி உங்களுக்கெல்லாம் சில்லியாகப் பட்டாலும், என் இந்தக் கேள்விக்கு இங்கு இருக்கும் என் மலையாளி நண்பர்கள் ஒருவரிடமும் பதிலில்லாததாலேயே, இதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
‘ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்’ என்று நம் வாலி சொன்ன வார்த்தைகளின் நிஜத்தை படகோட்டி காட்டியதோ இல்லையோ, செம்மீன் படம் கடலோர மீனவர் சமூக வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது;
பெற்றோர் கருத்தம்மாவின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் - காதலன் பரீக்குட்டி ஒரு முஸ்லிம் என்பதாலும், கருத்தம்மாவின் தந்தையின் பணத்தாசையினாலும்! பெற்றோரின் வற்புறுத்தலில் தன் காதலைத் துறக்கிறாள் கருத்தம்மா. வீட்டார் பார்த்துவைத்த பழனியைக் கரம் சேர்த்து இல்வாழ்கையில் புகுகிறாள். பரீக்குட்டி அவள் பிரிவால் வாடி வதங்குகிறான் (இன்றைய ‘காதல்’ படம் வரை ஆண்கள் நிலைதான் பரிதாபத்திற்குரியது...). பழைய காதல் பற்றிய வதந்திகளுக்கு இடையிலும் கருத்தம்மா-பழனி வாழ்க்கை ஓஹோ என்றில்லையென்றாலும் சுமுகமாகவே செல்கிறது. இதற்கிடையில் கணவன் நடுக்கடலில், மீன் பிடிக்கப்போயிருக்கும் ஒரு இரவில், கருத்தம்மாவும், பரீக்குட்டியும் சந்தர்ப்பவசத்தால் சந்திக்க நேர, அந்தத் தருணத்தில் மீண்டும் மலர்ந்த காதல் அவர்களை ஒன்றாக்குகிறது, அதே காட்சியின் தொடர்ச்சியாக, தன்னந்தனியனாய் ஒரு சுறா மீனைப்பிடிக்கப் போன கணவன் ஆழிச்சுழலில் சிக்குவதையும் காட்டுகிறார்கள். அடுத்துவந்த கடைசி காட்சியில், மரணத்தில் இணைந்த காதல் ஜோடிகளாக கருத்தம்மாவும், பரீக்குட்டியும் கடற்கரையோரம் கிடக்க... அவர்களுக்கு சற்றே தொலைவில் ஒரு சுறாமீனும் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கிறதாகக் காட்சி முடிகிறது.
தகழி சிவசங்கரன் பிள்ளையின் இக்காவியத்திற்கு ராமு காரியாத் திரைவடிவம் கொடுத்திருந்தாலும், தேசிய அளவில் செம்மீன் படம் மூலம் மலையாள சினிமாவை பேசவைத்தக் காரண கர்த்தாக்களாக இருந்த மூன்று மலையாளிகள் அல்லாதாரின் பங்கினையும் குறிப்பிட்டாக வேண்டும் - மாக்கஸ் பார்ட்லேவின் ஒளிப்பதிவும், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஒலிப்பதிவும் (எடிட்டிங்) மற்றும் செம்மீன் திரைக்காவியத்தின் ஜீவனோடு ஐக்கியமான சலீல் சவுத்ரியின் இசையும்.
மற்றுமொரு மலையாளி அல்லாதாரும் செம்மீன் திரைக்காவியத்தின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்... அவர்தான் மன்னா டே. அவர் பாடிய ‘மானஸ மைனி வரு’ பாடல், கேரளத்தில் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவெங்கிலும் மற்றும் இலங்கைத் தமிழர் மத்தியிலும் அதிகம் ரசித்துக் கேட்கப்பட்ட பாடலாக விளங்கியது. உணர்ச்சிகரமான அந்தப் பாடலில் அதிகம் ஈடுபட்டுப் பாடிய மன்னா டே அவர்களினால் எப்படி ஒரு மலையாளப் பாடலை அதுவும் அதன் ஜீவன் குலையாமல் எப்படிப் பாடமுடிந்தது என்று ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஆரம்பத்தில், ரெக்கார்ட்டிங் முடிந்துவிட்டு, வீட்டில் செம்மீன் பாடலைப் பாடிய போது, மன்னா டேயின் மகள் கேட்டாளாம் அது என்ன மொழிப்பாடல் என்று. மன்னா டே, அப்பாடல் மலையாள மொழி என்று சொன்னதை நம்பாத அவர் மகள், மீண்டும் அப்பாடலை அவள் அம்மா முன்பாகப் பாடி உறுதிசெய்தபின்னரே நம்பினாளாம். நிறையபேருக்குத் தெரியாத ஒரு விஷயமும் உண்டு.. மன்னா டேயின் துணைவியார் சுலோசனா ஒரு மலையாளி என்பது.
மன்னா டேயின் ரசிகர் எண்ணிக்கை என்னதான் கூடினாலும், அவர் ஏன் முகேஷ், முகமது ரஃபி, கிஷோர் குமார் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்பது எனக்கு விளங்காததாகவே இருக்கிறது. இரவு நேரம், கடற்கரையோர மணற்பரப்பு, காதலியின் பிரிவில் வாடும் காதலன் பரிக்குட்டியாக சோகம் ததும்பும் முகத்துடன் மது பாடுவதுபோல் அமைந்த வயலார் ராம வர்மாவின் வரிகளில் வந்த இந்தப் பாடலும், காட்சியும் காலத்தால் அழிக்க முடியாத திரைப்படைப்புகளில் ஒன்று.
மானஸ மைனே வரு
மதுரம் நுள்ளித் தரு
நின் அரும பூவாதிகளில் தேடுவதாரே.. ஆரே (மானஸ மைனே...)
நிலாவிண்டெ நாட்டில் நிஷாகந்திப் பூத்தல்லோ
களிக் கூட்டுகாரனெ மறன்னு போயோ (மானஸ மைனே...)
கடலிலே ஓலவும் கரலிலே மோஹவும்
அடங்குகில்லோமனே அடங்குகில்லா (மானஸ மைனே...)
லதா மங்கேஷ்கருடன் சோரி சோரி படத்தில் பாடிய ‘ஏ ராத் பீகி பீகி...’ ‘ஆஜா சனம்...’ பாடல்களும் மற்றும் ஸ்ரீ420 படத்தில் ‘ப்யார் ஹுவா இக்ரார் ஹுவா...’ பாடலும் மன்னா டே அவர்கள் பாடிய என் உளங்கவர்ந்த மற்ற பாடல்கள்.
Links:
செம்மீன் படம் பற்றிய விக்கிப்பீடியா தகவல்
மன்னா டே பற்றிய விக்கிபீடியா தகவல்
மன்னா டே அவர்களின் வலைத்தளம்
செம்மீன் படம், கதை பற்றி வலைப்பூ ஒன்றில்
21 Comments:
மதுரையில் தியாகராசர் கலைக் கல்லூரியில் என் பேராசிரியர் திரு. என்.சக்திவேலன் அவர்கள் அரவிந்தர் எழுதிய "சாவித்திரி" (ஆங்கில)இலக்கியப் பாடம் நடத்தும் போது
இந்தப் படம் குறித்து அடிக்கடி எங்களிடம் பேசுவார்..
அவர் கூறியது:
ஒரு மனைவியின் கற்புதான் கணவனின் உயிருக்குக் காவல்..செம்மீனுக்கு (PRAWN) அதன் ஓடு காவல் இருப்பதைப் போல..அது சீர்குலையாமல் இருக்கும் வரை கணவன் உயிருக்குப் பாதுகாப்பு..
சீர்குலையும் போது சுருண்டுவிடவேண்டியதுதான்..ஓடிழந்த செம்மீனைப் போல..
கதைப்படி அவள் கணவனும் இறந்துவிடுவதாகப் பேராசிரியர் சொன்ன ஞாபகம்..படம் பார்க்கும் வாய்ப்பு இன்று வரை கிடைக்கவில்லை.
Until now i don't know how to write a comment in tamil. Will look for that soon. U have a wonderful blog here. Im going to be a frequent visitor of your blog. Thanks for visiting mine.
நன்பருக்கு வணக்கம்.. கத்தாரிலேயே இருந்தாலும் இன்னும் நாம் சந்தித்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை. உங்கள் செம்மீன் பட விமர்சனம் நன்று. உங்கள் ப்ளாக் நல்ல கலர்ஃபுல் ஆக உள்ளது. நல்ல விதமாய் பதிவு இடுகிறீர்கள். இனி தொடர்ந்து வருவேன்..
அன்புடன்..
ஜெயக்குமார்
மாம்ஸ் .. அருமையான விமர்சனம்.. அதுவும் திரைக்கு பின் விபரங்களோடு...
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேரேரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......
மாம்ஸ் .. அருமையான விமர்சனம்.. அதுவும் திரைக்கு பின் விபரங்களோடு...
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேரேரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......
// செம்மீன் நாவலை இருவதே நாட்களில் எழுதிமுடித்தாராம்.//
சிறப்பான படைப்புக்கள். திட்டமிட்டு செய்யப்படுவதில்லை.. அதுவாகவே அமைந்து விடுகிறதுங்கரது உண்மைதானோ?..
// ‘கடலினக்கரப் போணோரே..’ பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் கூட ‘ஹிட்’ ஆன ஒரு பிறமொழிப்பாடல்.//.
நம்ப முடியவில்லை..வில்லை... வில்லை (எக்கோ எபக்டோட சிவாஜி ஸ்டெயுலுல படிங்க...)
தமிழகத்துல எந்த தொட்டில ஹிட் ஆச்சுன்னு சொல்ல முடியுமா?..ஹிஹி.. யாருக்குமே தெரியலை.. ஏதோ ஒன்னு ரெண்டு மலையாளிகளை அறிந்தவர்களைத் தவிர....ஹிஹி...
சொல்ல வந்த விசயத்தை இம்புட்டு அருமையா ,சுவரஸ்யமா அடிஸ்னல் விபரங்களோட எழுதறிங்க... நம்ம தமிழ் படங்களுக்கும் விமர்சனம் எழுதலாமே.. :))))
[ பதிவுல கொஞ்சம் அதிகமாவே.. மலையாள வாடை அடிக்குதுதே.. என்ன மேட்டரு?..ஹிஹி...
// கானகம் said...
நல்ல விதமாய் பதிவு இடுகிறீர்கள். இனி தொடர்ந்து வருவேன்..//
இதுதான் நல்ல புள்ளைக்கு அழகு.. கட்டடிக்காம வந்து அட்டெனன்ஸ் சொல்லனும்..ஹிஹி.....
// உங்கள் ப்ளாக் நல்ல கலர்ஃபுல் ஆக உள்ளது. //
கானகத்தாரே ஒங்களுக்கு கலருன்னாக்கா ரொம்ப புடிக்குமோ?..(இதுல உள்குத்து எதுவுமில்லைங்க்கோ..ஹிஹி..)
//கானகத்தாரே ஒங்களுக்கு கலருன்னாக்கா ரொம்ப புடிக்குமோ?..(இதுல உள்குத்து எதுவுமில்லைங்க்கோ..ஹிஹி..)//
நல்லதுங்கோ..கலருன்னா அப்படி ஒரு இஷ்டம்... இது கூட ஹி...ஹி....க்குத்தான்..
//நின் அரும பூவாதிகளில் தேடுவதாரே.. ஆரே //
It is not பூவாதிகளில், but 'poo vaadiyil nee'
The link for listening to the songs in the film chemmeen is given below:
http://www.musicindiaonline.com/music/malayalam/s/movie_name.3237
பாசமலர், உங்கள் பேராசிரியர் திரு. என்.சக்திவேலன் அவர்கள் சொல்வது உண்மைதான். கணவன் உயிரின் பாதுகாப்பு மனைவியின் கற்பில்தான் உள்ளது என்பதைத்தான் மையக்கருவாகக் கொண்டு இந்தப் படம் பின்னப்பட்டிருக்கிறது..
http://www.imdb.com/title/tt0059028/plotsummary
ஓடிழந்த செம்மீன் நல்ல உவமை.
AnuSriram... Vanakkam. தங்கள் வரவு நல்வரவாகுக.
//Until now i don't know how to write a comment in tamil. Will look for that soon.//
வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள், தமிழில்.. வாசிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வணக்கம், கானகம் ஜெயக்குமார்.. வருக வருக... தங்கள் கருத்துக்கு நன்றி. விரைவில் சந்திப்போம்.
//மாம்ஸ் .. அருமையான விமர்சனம்.. அதுவும் திரைக்கு பின் விபரங்களோடு...
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரேரேரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......//
நன்றி ரசிகன். இது விமர்சனம் அல்ல. செம்மீன் படத்தினைப் பற்றிய ஒரு sharing of thoughts அவ்வளவுதான்.
//சிறப்பான படைப்புக்கள். திட்டமிட்டு செய்யப்படுவதில்லை.. அதுவாகவே அமைந்து விடுகிறதுங்கரது உண்மைதானோ?..//
நிங்கள் சொல்வது உண்மைதான். நம்ப கவியரசர் ஒரு பாடலை 5 நிமிடத்தில் எழுதி முடித்தாராம். நமக்கோ, ஒரு பதிவைப் போடுவதற்கே எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது பாருங்கள் :)
//// ‘கடலினக்கரப் போணோரே..’ பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் கூட ‘ஹிட்’ ஆன ஒரு பிறமொழிப்பாடல்.// நம்ப முடியவில்லை..வில்லை... வில்லை (எக்கோ எபக்டோட சிவாஜி ஸ்டெயுலுல படிங்க...)
தமிழகத்துல எந்த தொட்டில ஹிட் ஆச்சுன்னு சொல்ல முடியுமா?..ஹிஹி.. யாருக்குமே தெரியலை.. ஏதோ ஒன்னு ரெண்டு மலையாளிகளை அறிந்தவர்களைத் தவிர....ஹிஹி...//
செம்மீன் படம் வெளியான சமயத்தில், TV, Cable channels, MP3 இல்லாத அந்த காலகட்டத்தில், நேயர்களின் விரும்பிக் கேட்டப் பாடலாகப் பல முறை சிலோன் ரேடியோவில் 'கடலிணக்கரப் போணோரே' பாடல் ஒலிபரப்பாகியது என்றால் அப்பாடல் எந்த அளவிற்கு தமிழகத்தின் பல பகுதிவாழ் மக்களிடத்தேயும் பிரபலமாகியிருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
இப்பாடல் குறித்த மேலதிகத் தகவலுக்கு கானா பிரபா அவர்களது முந்தைய பதிவை தயவுசெய்து முழுவதுமாக (பின்னூட்டங்கள் உட்பட) வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
http://kanapraba.blogspot.com/2006_03_01_archive.html
//சொல்ல வந்த விசயத்தை இம்புட்டு அருமையா ,சுவரஸ்யமா அடிஸ்னல் விபரங்களோட எழுதறிங்க... நம்ம தமிழ் படங்களுக்கும் விமர்சனம் எழுதலாமே.. :))))//
நன்றி ரசிகன. நான் முன்பே சொன்னதுபோல இது விமர்சனம் அல்ல. செம்மீன் படத்தினைப் பற்றிய ஒரு sharing of thoughts அவ்வளவுதான்.
பல கோடி ரூபாய் மூலதனத்தினாலும், பல பேரின் உழைப்பினாலும் உருவாகும் ஒரு சினிமாவை 'நம்மால் ஆன ஒரு உபகாரமாய்' என் விமர்சனத்தின் மூலமாக உதாசினப்படுத்த விரும்பவில்லை. so not to review new movies... இது சில நாட்களுக்கு முன்பாக கொள்கை ரீதியக நான் எடுத்த ஒரு முடிவு (ஹிஹி என்று நீங்கள் எல்லாரும் சொல்வது என் காதில் கோரஸாக விழத்தான் செய்கிறது :))
எதற்கும், சினிமா விமர்சனம் பற்றிய எனது முந்தைய பதிவையும் தயவுசெய்து வாசியுங்களேன்..
http://bharateeyamodernprince.blogspot.com/2006/04/blog-post_13.html
நன்றி!
பாரதீய நவீன இளவரசரே
செம்மீன் பார்த்தவுடனேயே அதைப் பற்றி எழுதவோ, பேசவோ இயற்கையாகவே தூண்டும். இந்தியாவின் தலைசிறந்த 10 படங்கள் என்றால் விடுபட்டுப் போகாத ஒன்று இது.
உண்மையைச் சொல்லப் போனால் மலையாளிகள் கூட உங்களைப் போல் இவ்வளவு விபரமாக இப்படி எழுதியிருப்பார்களோ தெரியவில்லை. அருமையான பதிவு. மானடே குறித்தும் உங்கள் மூலம் தான் அறிய முடிந்தது.
K.M.Abubacker, thank you very much for your correctin and for the link.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கானா பிரபா. சலீல் சௌத்ரியின் இசை பற்றிய உங்களது ஒரு பதிவுகூட நான் இதை எழுதுவதற்கு ஒரு காரணம்தான்.
அருமையான எழுதியிருக்கீங்க..
///அவர் ஏன் முகேஷ், முகமது ரஃபி, கிஷோர் குமார் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்பது எனக்கு விளங்காததாகவே இருக்கிறத///
உண்மை தான்.. ஆனாலும் அவருக்குன்னு ரசிகர்களும் இருக்காங்க...
ஆஜா-சனம்.. என்னுடைய fav
வருகைகும் கருத்துக்கும் நன்றி தீபா. எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத அந்த 'ஆஜா-சனம்' பாடலின் வெற்றி என்னவோ லதாவிற்குத்தான் போனதாக என் நண்பர்கள் சொன்னாலும், மன்னா டேவின் அழகிய குரலும் (நம்ப P.B.ஸ்ரீநிவாஸ் குரல் மாதிரி) அந்தப் பாடலின் அமரத்துவத்திற்குக் காரணம் என்றே எனக்குப் படுகிறது.
Post a Comment
<< Home