கூட்டணி ஆட்சி
மாலன் அவர்களின் வலைப்பதிவில் கூட்டணி ஆட்சி உருவாவதற்கான சாத்தியக்கூறுகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். http://thisaigall.blogspot.com/.
இதுபற்றியும், தேர்தல் முடிவுகள் குறித்தும் எனக்குத் தோன்றுவது:
(1) தி.மு.கழகக் கூட்டணி ஆட்சிக்கு வந்து கலைஞர் முதல்வரானாலும், தனிப்பெருங்கட்சியாக அ.தி.மு.க. உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அம்மாதிரியான சூழலில், காங்கிரஸின் கரமும் ஓங்கும், பாமகவின் பிடியும் இறுகும்.
(2) அதேபோல, தொங்கு சட்டசபை உருவாகும் சூழலில், அ.தி.மு.க. தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தால், பாமகவும், காங்கிரஸும் தீர்மானிக்கும் சக்திகாளாக (அதாவது, துணிச்சலுடன் இடப்பெயர்ச்சிக்குத் தயாராகும் நிலைக்கு) வரும் வாய்ப்பும் உள்ளது.
மேற்சொன்ன (1) மற்றும் (2) போல நடந்தால், காலப்போக்கில், நல்லதோ, கெட்டதோ, கூட்டணியாட்சி என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும். சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதுபோல சிறு கட்சிகளின் மவுசு பெரியகட்சிகளிடத்தே அதிகரிக்கும்.
மத்தியக் கூட்டணியில் பிராந்தியக் கட்சிகள் அதில் பங்குபெறும் சக்திகளாக உருவெடுக்கும்போது, மாநில அளவிலும், சிறிய கட்சிகள் (sub-regional parties) என்றுமில்லாத அளவிற்கு முக்கியத்துவம் பெற வாய்ப்பிருக்கிறது. அப்புறமென்ன, வால் நாயை ஆட்டும் கதை இங்கும் அரங்கேறும்...
0 Comments:
Post a Comment
<< Home