Revathy - belated birthday greetings to Revathy...8th July....is birthday of ரேவதி - தமிழ்த் திரைப்படங்களில் தோன்றிய நடிகைகளிலேயே என்னை அதிகம் கவர்ந்தவர், மண்வாசனைக் காலம்தொட்டே, டீஸன்டான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் அவரது பண்பும், இன்று சிறிய கதாபாத்திரங்களே ஏற்று நடிக்கும் சூழலில், அவரது யதார்த்தமான நடிப்புத் திறனும், தவிர, `பப்ளிசிடி’ செய்வதில் மெனக்கெடாமல் சமூகநலன் கருதி உண்மையிலேயே சில பொதுசேவைக் காரியங்களில் ஈடுபட்டுவருவதாலும், இன்றுவரை, அவர்மீது மதிப்பும் மரியாதையும் எனக்குண்டு. அவர் இயக்கத்தில் வெளியான Mitr, My Friendம், Phir Milengeயும் அவர் சமூகத்தின்பால் கொண்டுள்ள அக்கறைக்குச் சான்று.
மேலும், 1996 பாரளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் எந்தக்கட்சியின் தயவுமின்றி ரேவதி, சுயேட்சையாகப் போட்டியிட்டபோது, 40,000 வாக்குகளுக்கும் மேலாகப் பெற்றார். மார்க்ஸிஸ்டுடள் ஆதரவுடன் போட்டியிட்ட ம.தி.மு.கவையும், கணிசமான வாக்குவங்கியுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியின் டாக்டர் மைத்ரேயனையும்விட (கட்சியின் அன்றைய மாநிலச் செயலரில் ஒருவர்) அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் ரேவதி வந்தது குறிப்பிடத்தக்கது.
திரைப்படக் கலைஞர்களில் என் மனதில் இடம்பிடித்தவர்கள் என்று பெரிய பட்டியலே உண்டு - நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், பாலாசிரியர்கள், பாடுபவர்கள்...என நீளும்... எனினும், நடிகைகள் என்று வரும்போது, மிகச்சிலரே என் ரசனைக்கு ஒத்துவருகின்றனர் - பொதுவாழ்வில் அவர்களது செயல்கள் குறித்த என் அபிப்ராயங்கள்கூட ஒரு காரணமாக இருக்கலாம் (உடனே, நடிகர்கள் யோக்கியமா என்று கேட்கவேண்டாம்). பொதுவாகவே நமக்குள் பொதிந்துகிடக்கும் ஆணாதிக்க மனோபாவமேகூட ஒரு காரணமாக இருக்கலாம். இவையனைத்தையும் மீறி, சில திரைப்படங்களில், சில நடிகைகளின் சிறப்பான பாத்திரப்படைப்பும், அவர்களது திறமையான நடிப்பும் என்னைக் கவரத்தவராமலில்லை. இதற்கான பெருமைகள் அந்த படங்களின் இயக்குனரையும் அந்தந்த நடிகைகளையே சாரும்.
அங்கனம் நான் கண்டுகளித்த படங்களில் கதாபாத்திரத்தோடு ஒன்றி, நடிப்பில் உயரம் காட்டிய நடிகைகளும் ஏராளம்...இப்போது என் ஞாபகத்தில் வந்தவர்களை மட்டும் சொல்கிறேன்...
பானுமதி அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மலைக்கள்வன்..
T.R.ராஜகுமாரி சந்திரலேகா, மனோகரா..
கண்ணாம்பா மனோகரா..
K.B.சுந்தராம்பாள் ஔவையார், திருவிளையாடல்...
சாவித்திரி களத்தூர் கண்ணம்மா, மிஸ்ஸியம்மா
பத்மினி தில்லான மோகனாம்பாள், வியட்னாம் வீடு, பூவே
பூச்சூடவா
வைஜயந்திமாலா வஞ்சிக்கோட்டை வாலிபன், தேன் நிலவு
சரோஜாதேவி கல்யாணப்பரிசு, தாமரை நெஞ்சம்
தேவிகா நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்கம் மறப்பதில்லை
சௌகார் ஜானகி இரு கோடுகள், காவியத்தலைவி
வாணிஸ்ரீ வசந்த மாளிகை
வெண்ணிற ஆடை நிர்மலா வெகுளிப்பெண்
சுஜாதா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், அன்னக்கிளி, விதி
ஸ்ரீவித்யா சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள்
ஷோபா நிழல் நிஜமாகிறது, முள்ளும் மலரும், ஏணிப்படிகள், பசி
அஸ்வினி உதிரிப்பூக்கள், நண்டு
லக்ஷ்மி சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம்
பார்க்கிறாள், சிறை, சம்சாரம் அது மின்சாரம்
சரிதா அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர்,
வண்டிச்சக்கரம், நூல் வேலி, நெற்றிக்கண்
ஸ்ரீதேவி பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சு, சிகப்பு
ரோஜாக்கள், வருமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை,
தர்ம யுத்தம்
ஸ்ரீப்ரியா அவள் அப்படித்தான், நட்சத்திரம், வாழ்வவே மாயம்
சுஹாசினி நெஞ்சத்தைக் கிள்ளாதே, பாலைவனச் சோலை ஒரு
இந்தியக் கனவு, சிந்து பைரவி, கோபுரங்கள் சாய்வதில்லை, கூடெவிடே? (மலையாளம்) என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, மணுவத்தூரிலே ஆயிரம் சிவராத்திரிகள் (மலையாளம்),
ராதிகா மீண்டும் ஒரு காதல் கதை, நீதிக்கு தண்டனை, ஸ்வாதி
முத்யம் (தெலுங்கு), தென்றல் சுடும், ஜீன்ஸ்
அர்ச்சனா வீடு, சந்தியா ராகம், ரெட்டை வால் குருவி
ராதா முதல் மரியாதை, நியாயத் தராசு
ஷோபனா தளபதி, Manichithrathaazh
ரம்யா கிருஷ்ணன் படையப்பா
சிம்ரன் வாலி, கன்னத்தில் முத்தமிட்டால், பார்த்தாலே பரவசம்
மீரா ஜாஸ்மின் கஸ்தூரி மான்
பானுப்ரியா அழகன், சுந்தர காண்டம்
விஜயஷாந்தி பூ ஒன்று புயலானது, வைஜயந்தி ஐ.பி.எஸ்.
நதியா பூவே பூச்சூடவா
ரோஹினி மறுபடியும், மகளிர் மட்டும்
மேலும், கீழ்காணும் சில நடிகையரின் நடிப்பும் ரசிக்கும்படியாக இருந்தது எனலாம்.
அம்பிகா அந்த ஏழு நாட்கள், நான் பாடும் பாடல்
ஊர்வசி முந்தானை முடிச்சு, மைக்கேல் மதனகாமராஜன்
ரேகா கடலோரக் கவிதைகள்
சசிகலா இளமைக் காலங்கள்
ஜெயஸ்ரீ வண்ணக்கனவுகள்
கீதா கடமை கண்ணியம் கட்டுப்பாடு
சீதா உன்னால் முடியும் தம்பி
அமலா அக்னி நட்சத்திரம்
கவுதமி நீபாதி நான்பாதி, தேவர் மகன், குருதிப் புனல்
கிரிஜா இதயத்தைத் திருடாகதே
சித்தாரா புது வசந்தம்
சுகன்யா சின்னக் கவுண்டர்
சங்கீதா பூவே உனக்காக, சிந்தாவசிஷ்டயாய ஷ்யாமளா (மலையாளம்)
ஹீரா காதல் கோட்டை
ஜோதிகா குஷி, சிநேகிதியே
ஷாலினி அலைபாயுதே, காதலுக்கு மரியாதை
மீனா ரிதம், பாரதி கண்ணம்மா, சீதா ராமைய்யக்காரி மணவாராலு
(தெலுங்கு)
லைலா பிதாமகன்
கிரண் அன்பே சிவம்
சோனியா அகர்வால் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி
உமா தென்றல்
சினேகா ஆட்டோகிராஃப், ஏபிசிடி
நவ்யா நாயர் அழகிய தீயே
அஸின் கஜினி
பாவனா சித்திரம் பேசுதடி, தெய்வநாமத்தில் (மலையாளம்)
இது தவிர, நம்முடைய ஆச்சி மனோரமாவின் நகைச்சுவை நடிப்பும், சுகுமாரி, சுந்தரிபாய் போன்றோரின் யதார்த்தமான நடிப்பும், அம்மன் வேடத்தில் வரும் K.R. விஜயா, மாமியார் பாத்திரத்திற்குப் பொருந்தும் M.N.ராஜம், கவர்ச்சியில் சில்க் ஸ்மிதா, எந்தக் கதாபாத்திரமானாலும் அதோடு ஒன்றிப்போகும் ஜெயச்சித்ரா, பிறமொழியிலிருந்து தமிழ்ப்படத்தில் அவ்வப்போது தலையைக் காட்டிய நந்திதா தாஸ், ஜெயசுதா, ஜெயப்ரதா இவர்களிடமும் ரசனைக்குறிய திறம் இருப்பதாகவே தோன்றுகிறது.
இன்னும் யோசித்தால், இன்னும் பட்டியல் நீளும்...சுமித்ரா (புவனா ஒரு கேள்விக்குறி), லதா (வட்டத்துக்குள் சதுரம்), படாஃபட் ஜெயலக்ஷ்மி (ஆறிலிருந்து அறுபதுவரை)......என முடிவில்லாமல் போய்க்கொண்டே இருக்கும்.
...குஷ்பு, ரோஜா, ரம்பா, த்ரிஷா போன்றவர்கள் என்றுமே என் ரசனைக்குறியவர்களாக இருந்ததில்லை; மேலும் திறமைசாலியாகவும் எனக்கு அவர்கள் தென்படவில்லை. ஆனால், ஒருவித கவர்ச்சி சக்தியால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள் என்று வேண்டுமானால் குறிப்பிடலாம்.
தொடர்ந்து நம் சமுகத்தில் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையும் போக்குமே பெண்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமற் செய்கின்றன. இந்த அவலநிலைக்கு, சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல. எத்தனையோ திறமைகளிருந்தும், அதனை வெளிக்கொணர்வதற்கான வாய்புகள் மிகக் குறைவான சூழலிலும் (against overwhelming odds) தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவு கூறத்தக்க அளவில் அவர்கள் மனதில் பதிந்த கதாபாத்திரங்களாக நிலைத்துக்கொண்டிருப்பதே மிகப்பெரிய சாதனைதான்.
ஏற்கனவே நான் சொன்னது போல இந்தப் பட்டியல் exhaustive ஆனதல்ல; யோசித்தால், இன்னும் நிறையபேர் ஞாபகத்திற்கு வருவார்கள்...
Labels: சினிமா
1 Comments:
தொடர்ந்து நம் சமுகத்தில் நிலவும் ஆணாதிக்கச் சிந்தனையும் போக்குமே பெண்களின் சாதனைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமற் செய்கின்றன. இந்த அவலநிலைக்கு, சினிமாத்துறையும் விதிவிலக்கல்ல.
உண்மை
Post a Comment
<< Home