வாக்காளர் பெருமக்கள்
தேவை கூட்டணி அரசு என்ற தலைப்பில் மாலன் திசைகள் வலைப்பதிவில் http://thisaigall.blogspot.com/ அருமையாக அலசலையும். பின்னூட்டங்களின் மூலம் சுவையான விவாதத்தையும் கண்டேன். வாசித்து முடிந்தபின் என் மனதில் தோன்றியது...
கட்சிசாரா வாக்காளர்களில் முன்று வகையினரை நான் காண்கிறேன். ஒன்று, அனைத்துக் கட்சிகளின் மீதும் நம்பிக்கை இழந்தாற்போல் 'அத்தனை அரசியல்வாதிகளையும் செருப்பால அடிக்கணுமய்யா, மிலிட்டரி ரூல் வந்தாத்தான் நாடு உறுப்படும்' என்று punch கொடுக்கும் சாமானிய மக்கள்; யாருக்கு ஓட்டுப் போடுகிறோமென்பதை யாரிடமும் எந்தச் சூழலிலும் வெளியிட விரும்பாத நடுத்தர வர்கத்தினர்.
இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட கட்சியின் மேல் அதன் கொள்கைகளுக்காக செயல்திட்டங்களுக்காக `இவர்கள் நம் சமூகத்திற்கு எதிரி. இவர்கள் ஆட்சிக்கு வரவேகூடாது' என்ற எண்ணம் (vindictive menatility) மேலோங்க அக்கட்சியினை வெல்லும் திறந்வாய்ந்த கட்சிகளுக்கு, மற்ற விஷயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஓட்டுப்போடுபவர்கள்; சமுதாயத்தில், upper, middle, lower என எல்லாவகுப்பிலும் பரலாகக் காணப்படுபவர்கள்.
மூன்றாவதாக, "எனக்குப் பாலிடிக்ஸ், எலக்ஷன், இதுலயெல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லை ஸார்" என ஒதுங்குபவர்கள்; `நம்ம நண்பர் சொன்னார், சொந்தக்காரர் சொன்னார்' அதனால்தான் அவருக்கு இந்ததடவைப் போட்டேன்' என்பார்கள்; விஜயகாந்த் கட்சியின் பெயரைக் கேட்டால் தெரியாது என்பார்கள்; BJPலயா இருக்காரு திருநாவுக்கரசு என்று அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள்.
இப்படிப்பலரும் இருக்கிறார்கள். Exit pollல் யாருக்குப் போடுவதாகச் சொன்னார்களோ, அவர்களுக்குப் போடாமல், மற்ற கட்சிக்கு வாக்களிக்கும் நம் ஜனநாயக மன்னர்கள் நிறையபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்...
1 Comments:
சார்....
உங்கள் எழுத்து நடை ரொம்பவும் அருமையாக இருக்கிறது... உங்களது மடிப்பாக்கம் நினைவுகளை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி
இப்படிக்கு
மடிப்பாக்கத்தான்
Post a Comment
<< Home