பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Friday, April 13, 2007

தமிழுக்கும் அமுதென்று பேர்...
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)

- பாவேந்தர் பாரதிதாசனார்.

நன்றி: www.tamilnation.org

3 Comments:

At 4:40 PM, Blogger தூயா said...

உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :)

 
At 11:07 AM, Anonymous Anonymous said...

பாவேந்தரின் நினைவு நாளொட்டி இந்தப் பாடலைத் தங்கள் தளத்தில் கண்டது
மகிழ்ச்சியாய் இருந்தது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

 
At 11:15 AM, Blogger Bharateeyamodernprince said...

வருகைக்கு நன்றி தூயா அவர்களே, நாக.இளங்கோவன் அவர்களே.

 

Post a Comment

<< Home