பாப் வூல்மர்...
நேற்று (20-மார்ச் 2007), செயிண்ட் கீட்ஸ் அரங்கின் ஒரு ஓரத்தில் Bob Woolmerரை இழந்து தவிப்பதாகப் பறைசாற்றும் சோகம் தோய்ந்த பேனர்.
1975ல் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை விளாசும் வூல்மர்.
தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு (Aparthied) எதிராக¸ அமெரிக்கா, சோவிய யூனியன், ப்ரிட்டன் உட்பட பல சர்வதேச நாடுகள் தென்னாப்பிரிக்காவிற்கெதிராகத் தடையை விதித்திருந்தது.
தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட வருபவர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து வரவேற்றது தென்னாப்பிரிக்க அரசு. பணத்தாசையில் Geoff Boycott, Graham Gooch முதலியவர்களோடு Bob Woolmerஉம் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாடச் சென்றார்.
தென்னாப்பிரிக்கா சென்று விளையாடியதன் மூலம் நிறவெறிக்கு (Aparthied) எதிராகச் செயல் பட்டதற்காகவே Bob Woolmer தடை செய்யப்பட்டார். ஆனால், தான் வெறும் பணத்திற்காக அங்கு செல்லவில்லை, கிரிக்கெட் மீதான காதலால்தான் சென்றதாகச் சொன்னார். அதிலும் உண்மையில்லாமல் இல்லை. இங்கிலாந்து அணியில் அவருக்கு இடம் கிடைக்காமற் போனதும்தான் காரணமாகக் கருதப்பட்டது. பணத்தாசையினால்தான் தடையினை மீறி rebel tour மேற்கொண்டார்கள் என்று கூறிவிடமுடியாது. திறமையும் தகுதியும் இருந்தும், கிரிக்கெட் போர்டின் பாரபட்ச நடவடிக்கையின் காரணமாக இனியும் தங்களுக்கு அணியில் இடம் கிடைக்காதென்ற முடிவிற்கு வந்த சில ஆட்டக்காரர்களும் தென்னாப்ரிக்காவில் விளையாட rebel tourல் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவிர, பாதுகாப்பு காரணத்தினால்தான் (security threat) அவர் இலங்கைக்குப் பயிற்சியாளராகச் செல்லவில்லை. விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களையும், வெளிநாட்டவரையும் ஒரு காலத்திலும் கொன்றதில்லை என்ற வரலாற்று உண்மையறிந்தும், 1996 உலகக் கோப்பைப் போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத்தீவு அணிகள் பாதுகாப்பு காரணத்தினைச் சொல்லி இலங்கை செல்வதைத் தவிர்க்கவில்லையா? அதே காரணத்தினைச் சொல்லி, 2003 உலகக் கோப்பைப் போட்டியில் ஜிம்பாப்வேயில் விளையாட நியூஸீலாந்து அணிதான் மறுக்கவில்லையா?
எனினும், Bob Woolmerஅது மரணம் மிகவும் துரதிருஷ்டவசமானது, துயரம் தருவது. இன்றைய பரபரப்பு கிரிக்கெட்டில், அணியின் பயிற்சியாளர் சந்திக்கும் மன அழுத்தம் அளப்பறியது; இருந்தும் தவிர்க்க முடியாதது; அதற்கான பலியாக Bob Woolmer மரித்ததுதான் துரதிருஷ்டவசமானது. அவர் இழப்பினால் வாடும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ஒருமுறை பாக்கிஸ்தானில் விளையாட்டு வீரர்களனைவரும் கூட்டாகத் தொழுகைக்குச் செல்லும் முன் Bob Woolmerரையும் அழைத்தபோது, அவர் 'கிரிக்கெட்தான் எனது மதம்' எனச்சொல்லி மறுத்துவிட்டார் என்று cricinfo இணையதள அஞ்சலிக் குறிப்பொன்று செப்புகிறது.
அனைவராலும் நேசிக்கப்படுவது கடினம். ஆனால், Bob Woolmerரைப் பொறுத்தவரை அவர் பயிற்றுவிக்காத அணியினர்கூட அவர் மீது மரியாதை வைத்திருப்பது நல்லதொரு விஷயம். இலங்கை அணித்தலைவர் மஹேல ஜெயவர்தனவின் உருக்கமான இரங்கல் செய்தியை இன்றைய தினசரியில் காணலாம்.
'கிரிக்கெட் என்பது கணவான்களின் ஆட்டம்' என்ற கருத்து நெவிலி கார்டஸ் காலத்திலேயே போய்விட்டது. இன்றைய உலகமய, தனியார்மய வர்த்தக உலகில் கேட்க வேண்டுமா?
ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர், வங்கதேசத்தில் ஓரு பயிற்சி விளையாட்டில் forward shortlegல் ஃபீல்டிங் செய்யும்போது இந்திய வீரர் ரமன் லம்பாவும், 1980களின் துவக்கத்தில், தமிழ்நாட்டுடனான ஒரு முதல்நிலை ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சுக்கு இறையாகி இலங்கை வீரர் கமினி ரத்நாயகவும் ஆடுகளத்திலேயே மரித்தது கிரிக்கெட் விளையாடும் நல்லுலகில் Bob Woolmerஅது மரணச்செய்தி அளவிற்குப் பெரிய அலைகளை எழுப்பவில்லை. இந்த அவசர உலகின் அவசர கிரிக்கெட்டின் முதல்பலி Bob Woolmer தான் என்று சொல்லமுடியாது. இந்தியாவின் அதிர்ச்சித் தோல்வியில் அகமதாபாதில் அப்பாவி ரசிகர் ஒருவரும் மாரடைப்பால் காலமாகியுள்ளார் என்பது வருத்தத்தையும், கூடவே இனியும் கிரிக்கெட்டை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
Labels: கிரிக்கெட்
0 Comments:
Post a Comment
<< Home