தலைவர் படம்
ஒரிஜினல் தமிழனைப் பார்க்கணுமினா யாழ்ப்பாணத்துக்குத்தான் போகணுமின்னு சிவாஜியில் விவேக் டயலாக் வரும். அப்ப தியேட்டரே சும்மா அதிருதுல்ல (இங்கு தோஹாவில்)....அப்பவே தோணிச்சு, நம்மாளுகள விட சிலோன்காரனுவதான் திரையரங்கில் அதிகமின்னு.
நான் பணிபுரியும் இடத்தில் உள்ள மாற்று கம்பெனி ஊழியர் ஒருவர் அண்மைக்காலமாக நமக்கு நண்பரானார். தோஹா சினிமா திரையரங்கில் நான் சிவாஜி படம் விட்டு வெளியே வருகிறேன், இவர் அடுத்த ஆட்டத்திற்கான வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார். அட.. நம்ப ஆள்... என்று அப்போது ஏற்பட்ட பரிச்சயம்தான். நீங்களும் தமிழ்ன்னு இப்பத்தான் சார் தெரியும் என்றார்.
பணிச்சுமை காரணமாக அலுவலக நேரத்தில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், டாய்லெட், கேஃப்டீரியா என்று எங்காவது எதேச்சையாக எதிர்பட்டால் ஒரு கணநேர புன்னகையைப் பறிமாறிக்கொள்வதில் குறைவைப்பதில்லை. இப்போது இரண்டு நாட்களாக, குட்டி போட்ட பூனை போல் என்னையே சுற்றி சுற்றி வந்தார். கடைசியில் நேரடியாகக் கேட்டேவிட்டார்... கடன் கேட்கப் போகிறாரோ என்று நினைத்த என் அல்ப புத்திக்கு ஒரு செருப்படி, அல்லது ஒரு இன்ப அதிர்ச்சி. சின்ன கோரிக்கைதான். தலைவர் படத்தை கலர்ல பிரிண்ட் போட்டுத் தருமாறு கேட்டார். கலர் ப்ரிண்டா..? தங்கும் அறையில் ஒட்டிவைத்துக்கொள்ளப் போகிறாராம்.
மன்னிக்கணும் அண்ணே, நான் ரஜினி படத்தையெல்லாம் டெலிட் பண்ணிட்டேன். சும்மா ஒரு இதுக்காக இரண்டு நாள் ஸ்க்ரீன் சேவரா வைத்திருந்தேன், அவ்வளவுதான்...
அவர் என்பேச்சைக் கேட்டமாதிரி தெரியவில்லை; அவர் கையில் ஒரு pendrive வைத்திருந்திருந்ததை நானும் தாமதமாகத்தான் கவனித்தேன்.
அவர் கேட்ட படங்களைத்தான் இங்கே upload செய்துள்ளேன்.
4 Comments:
சூப்பர் நல்ல இருக்கு........
உங்களின் முதலாவது படத்தில் கிடட்ண்ணா வீரச்சாவடைந்த நேரம், கிட்டின் தாயாருக்குத் தலைவர் ஆறுதல் கூறுகின்றார்.
தலைவருக்குப் பின்புறம் கறுப்புக்கண்ணாடி( கூலிங் கிளாஸ்) போட்டிருப்பவர் தான் தமிழ்செல்வன்.
அடையாளம் காண முடிகின்றதா?
தலைவரைச் சுற்றி நிற்பவர்கள் இப்போதைய கேணல் நிலைத் தளபதிகள், சூசை, சொர்ணம், பானு, மற்றவர் அ** என்று பெயர் வரவேண்டும்.
இவர்கள் அனைவருமே, தலைவரின் பாதுகாப்பு பிரிவில்(body card) இருந்தவர்கள்.
படங்கள் அருமை...
கடைசி படம் எக்ஸலண்ட்...!!!
அன்புள்ள அனனி # 1, வருக வருக. இந்த ஓராண்டு காலத்தில் (இல்லை, இந்தப் 15 மாதகாலத்தில்) நீங்கள்தான் என் வலைப்பதிவில் பின்னூட்டமிட்ட முதல் அனனி (anonymous). நீங்கள் வலைப்பதிவர் எனில் உங்கள் லிங்கைக் கொடுத்திருந்தால், உங்கள் பக்கத்தையும் நான் ஒரு விசிட் அடிக்க ஏதுவாக இருந்திருக்குமே.
அன்புள்ள அனனி # 2,
வந்ததற்கும், தகவல்கள் தந்ததற்கும் நன்றி. தங்களது பெயரையும் வலைப்பக்கத்திற்கான லிங்கையும் கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.
செந்தழல் ரவி, வந்தமைக்கும் பாராட்டியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
Post a Comment
<< Home