பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, July 12, 2007

அத்தாழநல்லூர் - அம்பாசமுத்திரம்

உறவினர் அனுப்பிய படங்கள்...அம்பாசமுத்திரம் (Ambasamudram) மற்றும் அத்தாழநல்லூர் (Aththazhanallur) .. திருநெல்வேலி மாவட்டம்.

அத்தாழநல்லூர் - ஆற்றங்கரை, அதனை ஒட்டியிருக்கும் கோயில்....
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக்
கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.

இது திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை நோக்கிப் பாடிய பாடல். அத்தாழநல்லூர் ஆதிமூலஸ்வாமி (கஜேந்திரவரதர்) கோயில் பாடப்பெற்றத்தலமா என்று எனக்குத் தெரியாது; இந்தக் கோயில் 108 திவ்வியதேசத்தில் அடங்குமா என்பதும், இந்தக் கோயில் பெருமாள், ஆழ்வார் பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டிருக்கிறாரா என்பதும் அறியேன். நாங்கள் வைணவ மரபினர் இல்லையெனினும், இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள்தான் எங்கள் குடும்ப தெய்வம்.

Labels:

2 Comments:

At 3:08 PM, Blogger Deepa said...

உங்கள் உறவினருக்கு நன்றி..

கஜேந்திர மோட்ஷம் படம் ரொம்பவே சூப்பர்.. இந்த style of painting ஐ இப்பெல்லாம் பார்க்கவே முடியலை.. defenite brush strokes and vibrant colors...

 
At 9:54 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

Welcome Deepa....thanks for your comments. i shall convey your thanks to my cousin too :)

 

Post a Comment

<< Home